மேலும் அறிய
Advertisement
திருக்குவளையில் இருந்து நாகைக்கு படியில் தொங்கிய படி ஆபத்தான பயணம் - கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை
’’அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பேருந்தை இயக்குவதோடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’’
நாகை மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் இருந்து மேலப்பிடாகை,பாப்பாகோவில் வழியாக நாகப்பட்டினத்திற்கு செல்லும் இந்த வழி தடத்தில் 10 நம்பர் டவுன் பேருந்து இயங்கி வருகிறது. தினந்தோரும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள் பணிக்கு செல்வோர் அரசு ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் நாகப்பட்டினத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி முடிந்து வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்வோர் இந்த பேருந்திலேயே செல்வதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு அபாயகரமான ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவே அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பேருந்தை இயக்குவதோடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளச்சாராய புழக்கத்தை ஒழிக்க நாகையில் பள்ளி மாணவர்கள் 6 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
நாகை அடுத்த புத்தூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த சைக்கிள் பேரணியில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி,மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கோட்டை வாசல் படி, புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபிஸ் சாலை, பால்பண்ணைச்சேரி வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
இறுதியாக சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப் பேரணியின் போது நாகை திருவாரூர் சாலையில் போக்குவரத்து வாகனங்களை முறைப்படுத்துதல் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இடையே ஆபத்தான முறையில் மாணவர்கள் பேரணியில் சென்றது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது வரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை முறைப்படுத்திய பிறகு விழிப்புணர்வு பேரணியை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion