அதிநவீன வானியல் தொலைநோக்கி....இந்தியளவில் சாதனை படைத்த சீர்காழி பள்ளி மாணவர்கள்..!
சீர்காழி தனியார் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக அதிநவீன வானியல் தொலைநோக்கியை உருவாக்கி தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளியில் இரண்டு நாட்கள் தொலைநோக்கி பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சியில் 6 வகுப்பு முதல் 11 வகுப்பு வரையுள்ள 39 மாணவ - மாணவிகள் ஒரு குழுவாக சேர்ந்து தொலை நோக்கி பயிற்சி பட்டறையின் மூலம் தாங்களாகவே தொலை நோக்கி செய்யும் பயிற்சி பெற்றனர்.
மாணவ, மாணவியர்கள் விஞ்ஞான விதிகளை ஆய்ந்தறிந்து விஞ்ஞான கருவிகளை தாமே உருவாக்க இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பள்ளியில் இது போன்ற பயிற்சி பட்டறை நடைபெறுவது இந்தியாவில் இதுவே முதல்முறை என்றும், தொலைநோக்கிகள் விஞ்ஞான ஆய்வுகளின் கண்களாக செயல்படுகிறது எனவும், இந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) 73 கோடி கி.மீ தூரத்தில் பயணிக்கும் வியாழன் கோளை பார்க்க முடியும் நட்சத்திரங்கள், கோள்கள், சூரிய குடும்பம் மற்றும் அண்டம் பற்றியும் விரிவாக மாணவர்களுக்கு விஞ்ஞானி தெரிவித்தார்.
இந்த பயிற்சி பட்டறை, சீர்காழியை சுற்றியுள்ள தனியார் பள்ளி மற்றும் இன்றி அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கி கொண்டு பள்ளி வளாகத்தில் இரவு வைத்து அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் வானில் தென்படும் வியாழன், செவ்வாய் கோள்களை பார்த்து மகிழ்ந்தனர். மேலும் இந்த தொலைநோக்கியை கல்லூரி மாணவர்கள் மட்டுமே அதுவும் துறை சார்ந்து பயிலும் மாணவர்களே உருவாக்க தயங்கு இந்த சூழலில் சீர்காழி போன்ற கடைமடை பகுதியை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கி இருப்பது பெருமிதம் கொள்ள வைத்துள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சுதீஷ் ஜெயின் தலைமை வகிக்தார். சிறப்பு விருந்தினராக ஐ.எஸ்.ஆர்.ஓ (இஸ்ரோ) விஞ்ஞானி இங்கர்சால் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தொலை நோக்கி பயிற்சி பட்டறையில் இளம் விஞ்ஞானிகள் பரத்குமார் வேலுசாமி மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகியோர் இரண்டு நாட்கள் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.
மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி சார்பில் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் கண்சிகிச்சை முகாம். ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி நீலவெளி கிராமத்தில் ஓஎன்ஜிசி காவேரி அசெட் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளர் மாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதில், பொதுமருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கண் சிகிச்சை, மற்றும் இசிஜி, ரத்த அழுத்தம் மருத்துவம் ஆகியவற்றிக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கண் பார்வை குறைபாடு உள்ள 200 நபர்களுக்கு கண்ணாடியும், 50 நபர்களுக்கு கைத்தடி இலவசமாக வழங்கப்பட்டது.