Sirkali: நடராஜர் சாமி சிலை மீது ஏறிய நாகப்பாம்பு.. படம் எடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசம்..!
சீர்காழியில் திருமண அலங்கார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை மீது 5 அடி நீள நாகபாம்பு படமெடுத்து ஆடிய நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
![Sirkali: நடராஜர் சாமி சிலை மீது ஏறிய நாகப்பாம்பு.. படம் எடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசம்..! sirkali : cobra climbed on the statue of Nataraja Sami statue Sirkali: நடராஜர் சாமி சிலை மீது ஏறிய நாகப்பாம்பு.. படம் எடுத்து ஆடியதால் பக்தர்கள் பரவசம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/16/2577606656f77313575ce93c2d557b9e1689498917518733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செங்கமேடு பகுதியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகை முறையில் அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நடராஜர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் வாடகை விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை மீது சுமார் 5 அடி நீளம் உள்ள நாகபாம்பு ஒன்று நடராஜர் சிலையில் ஏறி உடலை சுற்றிக்கொண்டு இருந்துள்ளது.
இதனை பார்த்து அச்சம் அடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜி சீர்காழி பாம்பு பிடி வீரரான பாண்டியனுக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு பாண்டியன், நடராஜர் சிலையில் சுற்றிக்கொண்டு இருந்த நாகப்பாம்பினை பிடிக்க முயன்றார். அப்போது அந்த நாகப்பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சுவாமி தலையின் மேல் படமெடுத்து சீறி அச்சுறுத்தியது.
பின்னர் சற்று சிரமத்திற்கு மத்தியில் லாவகமாக நாகப்பாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்தார். அதனை தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று நாகப்பாம்பினை பத்திரமாக விட்டார். சாமி சிலை அதுவும் நடராஜர் சாமி சிலை மீது நாகப்பாம்பு ஏறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஆச்சரியத்தையும் மேலும் சிலருக்கு பக்தி பரவசத்தையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)