மேலும் அறிய

தஞ்சாவூரில் இரு சமுதாயத்தினரிடையே கலவரம் - கல்வீச்சில் 6 போலீஸார் உள்பட 16 பேர் காயம்

’’வீரமணி தனது மனைவியை திட்டிய நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த காமராஜ் (52) என்பவர் வீரமணி தன்னை திட்டுவதாக தவறாக நினைத்து அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்’’

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகேயுள்ள மண்ணியாற்றங்கரையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சமுதாயத்தினர், பிளக்ஸ் தட்டி வைக்க முயன்றனர். அப்போது இரு சமூதாயத்தினர் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து, கபிஸ்தலம் போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி, அப்பகுதியில் யாரும், பிளக்ஸ் தட்டி வைக்க கூடாது என்று உத்தரவிட்டு சென்றனர். அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள், மண்ணி ஆற்றங்கரையில் பிளக்ஸ் தட்டி வைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஊரிலுள்ள மற்ற சமுதாயத்தினர்கள், பிளக்ஸ் தட்டி வைக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியில் மீண்டும் பிளக்ஸ் தட்டி வைக்க கூடாது என்றும், சிசிடிவி கேமராவை பொருத்தினர். இதனிடையில், கடந்த 18 ஆம் தேதி, மீண்டும் ஒரு சமுதாயத்தினர், அந்த பகுதியில் பிளக்ஸ் தட்டி வைக்க முயன்ற போது, மற்றொரு சமுதாயத்தினர், உடனடியாக பிளக்ஸ் தட்டி வைக்க கூடாது என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் இரு சமுதாயத்தினரிடையே கலவரம் - கல்வீச்சில் 6 போலீஸார் உள்பட 16 பேர் காயம்

அதன் பின்னர் கபிஸ்தலம் போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி, 19ஆம் தேதி, பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில், மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனை அடுத்து 19 ஆம் தேதி தாசில்தார் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு சமதாயத்தினரும் சமாதானம் ஆகாமல், தகராறில் ஈடுபட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் இரு சமுதாயத்தினர் இடையே கலவரம் ஏற்படும் என்பதால், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், திருவைக்காவூர் மெயின் ரோட்டில் வசிக்கும் வீரமணி (45) என்பவருக்கும் அவரது மனைவி சசிகலா (40) என்பவருக்கும் வீட்டின் முன்புறம் தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த வீரமணி தனது மனைவியை திட்டியுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற அதே கிராமத்தில் வசிக்கும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த காமராஜ் (52) என்பவர் வீரமணி தன்னை திட்டுவதாக தவறாக நினைத்து இதுபற்றி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது காமராஜும் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் அவ்விருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் இரு சமுதாயத்தினரிடையே கலவரம் - கல்வீச்சில் 6 போலீஸார் உள்பட 16 பேர் காயம்

இதை தொடர்ந்து, இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன், கல் வீசி தாக்கிக் கொண்டதில், கலவரம் ஏற்பட்டது. மேலும் ஆட்டோ உடைத்து சேதப்படுத்தி, 4 வீடுகளை சூறையாடினர். இந்த கலவரத்தின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெலட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா (37), கபிஸ்தலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் (55)  மற்றும் 4 ஆயுதப்படை காவலர்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூரில் இரு சமுதாயத்தினரிடையே கலவரம் - கல்வீச்சில் 6 போலீஸார் உள்பட 16 பேர் காயம்

மேலும் இந்த கலவரத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த திருவைகாவூர் அண்ணா நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜயராகவன் (16) கலியமூர்த்தி மனைவி தமயந்தி (55)தேவேந்திரன் மகன் தியாகராஜன் (27) அன்பரசன் மனைவி அனுசுயா (36), கௌதமன் மகன் திவாகர் (22), குணசேகரன் மனைவி மாலதி (32), திருவைகாவூர் தெற்கு தெருவை சேர்ந்த சுயம்பிரகாசம் மகன் நடராஜன் (36), திருவைகாவூர் மெயின் ரோட்டை சேர்ந்த துரைராஜ் மகன் கருணாமூர்த்தி (42) உள்ளிட்ட  15 பேர் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூரில் இரு சமுதாயத்தினரிடையே கலவரம் - கல்வீச்சில் 6 போலீஸார் உள்பட 16 பேர் காயம்

இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளபிரியா தலைமையில் மற்றும் ஆயுதப்படை, அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் மீது கபிஸ்தலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சை சரக போலீஸ் டிஐஜி பிரவேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை  மேற்கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget