மேலும் அறிய

மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக நாளை கிராம சபைகளில் தீர்மானம் - மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை தடுத்து நிறுத்த நாளை கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் பேராசிரியர் ஜெயராமன் அறிக்கை

காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் எரிவாயு மற்றும் எண்ணெய் திட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பேராசிரியர் ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக நாளை கிராம சபைகளில் தீர்மானம் - மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தின் காவிரிப்படுகையும், கடலோரக் கிராமங்களும் பேராபத்தில் உள்ளன. வரைமுறையற்ற எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களாலும், எரிவாயுக் குழாய்ப் பதிப்பாலும் காவிரிப் படுகை மாவட்டங்களும், இராமநாதபுரம் மாவட்டமும் ஒட்டுமொத்த அழிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களும் தப்பவில்லை. மரக்காணத்தில் இருந்து நாகை மாவட்டம், மற்றும் இராமநாதபுரம் வரை கடற்பகுதியிலும் எண்ணெய் - எரிவாயு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஏலம் எடுத்துவிட்டு காத்திருக்கின்றன. கடற்கரைக கிராமங்கள் காலியாகும் அபாயம் காத்திருக்கிறது. ஆகவே இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த கிராமசபைத் தீர்மானங்களை அக்டோபர் - 2 அன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தவறாமல் நிறைவேற்றுங்கள்.

எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காகப்  எண்ணெய்க் குழாய் பதிப்பு 7 மாவட்டங்களில் 14 வட்டங்களில் 77 ஊர்களின் வயல் பகுதிகளில் குழாய்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதை நாம் அனுமதித்து விடக்கூடாது.

 உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும்  நமது சொந்தக் கிராமங்களில் தொடர்ந்து வாழ, தமிழக நெற்களஞ்சியமாகிய காவிரிப்படுகையில் வேளாண்மை தொடர,  கடலோரக் கிராமங்கள் நிலம் தாழ்ந்து கடலுக்குள் அமிழ்ந்து போகாமல் தடுக்க, பாரம்பரிய மீன் பிடித்தொழில் தொடர, இத்தீர்மானங்களை இயற்றுவது அவசியம். இத்தீர்மானங்களையோ, இதையொத்த தீர்மானங்களையோ, தவறாமல் நிறைவேற்றுங்கள்!  

 தீர்மானம்- 1

நமது கிராமம்-ஒரு வேளாண்மை கிராமம் ஆகும். நம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விளைநிலம், பொது நிலம், தனியார் நிலம் எதுவாக இருந்தாலும், அதில் எண்ணெய் -எரிவாயு எடுப்பதற்கான கிணறுகளையோ, எண்ணெய் - எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களையோ அமைக்க, எந்தப் பெயரில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டாலும், அந்நிறுவனம் அரசு நிறுவனம் ஆனாலும் அல்லது தனியார் நிறுவனம் ஆனாலும், அனுமதிப்பது இல்லை என்றும், நம் கிராமத்தின் உழவுச் சூழல் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதால், அவ்உழவுச் சூழலைப் பாதிக்கின்ற, சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற வேறு எந்த தொழிலகங்களையும் அனுமதிப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

 தீர்மானம் - 2

நம் உணவுக் களஞ்சியமும், நம் வரலாற்று வழி வேளாண்மண்டலமும் ஆகிய, காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வேளாண்மை மட்டுமே இங்கு நடக்க வேண்டும் என்பதே நம் கிராமத்தின் நிலைப்பாடு என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்-3

விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில், நீர்வாய்க்கால்களின் நீர்போக்கை தடுக்கும் வகையிலும், வயல் மற்றும் தோட்டங்களில் விவசாய எந்திரங்கள் பயன்படுத்த முடியாத வகையிலும், தேவையான ஆழ்துளை தண்ணீர் குழாய்க் கிணறு, கான்கிரீட் கட்டிடங்கள் அமைத்துக்கொள்ள முடியாதபடியும், கிடைமட்ட எண்ணெய் - எரிவாயுக் குழாய்களை அமைக்கும் பணிகளை நமது கிராமத்தில் அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 4

விவசாயத்தைப் பாதிக்கும் வகையில், நம் ஊரின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரின் ஒப்புதலைப் பெறாத பாரத்மாலா திட்டத்தின் படியான சாலைகள், பெட்ரோ - கெமிக்கல் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், சுற்றுச்சூழலையும வாழ்வுச் சூழலையும் பாதிக்கும் தொழிலகங்கள் ஆகியவற்றை அமைக்க அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 5

காவிரிப் படுகையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சட்டமியற்றியுள்ளது. காவிரிப் படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்படுகிறது.
 
தீர்மானம் - 6

எங்கள் கிராமத்தை சேர்ந்த கடற்பகுதியில் எண்ணெய் - எரிவாயு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது எங்களுடைய மீன்பிடித்தொழிலையும், மீன் வளத்தையும் முற்றிலும் பாதித்துவிடும். ஆகவே, எங்கள் பகுதியை ஒட்டியுள்ள ஆழமற்ற மற்றும் ஆழமான கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதை அனுமதிக்க முடியாது எனத் தீர்மானிக்கப்படுகிறது. தமிழகத்தையொட்டிய கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்படுகிறது.

தீர்மானம் - 7

கிராமப் பொருளாதாரத்தை முற்றிலும் பறித்துவிடக் கூடிய, ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் உள்ளுர் விவசாயத்தை கார்ப்பரேட்டு முதலாளிகளிட ஒப்படைக்கிற, விவசாயம், விவசாயி, விவசாயக்கூலிகள் அனைவரையும் பாதிக்கிற, வேளாண் சட்டங்கள் மூன்றையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்படுகிறது. ஒப்பந்த விவசாயத்தை நம் ஊரில் அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Embed widget