மேலும் அறிய

போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன்

இந்திய வரலாற்றில் ஏராளமான மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். பலரும் வீரத்தால் புகழ்பெற்றிருந்தாலும், அனைத்து போர்களிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத மன்னர்கள் மிகவும் அரிது.

தஞ்சாவூர்: போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் ராஜராஜ சோழன். சேரர், பாண்டியர் முதல் இலங்கை வரை வெற்றிக் கொடி நாட்டிய மாமன்னனின் வீர வரலாறு பற்றி தெரியுங்களா?

இந்திய வரலாற்றில் ஏராளமான மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். பலரும் வீரத்தால் புகழ்பெற்றிருந்தாலும், அனைத்து போர்களிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத மன்னர்கள் மிகவும் அரிது. வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் அந்தச் சில மாமன்னர்களில் ஒருவர் தான் தமிழர்களின் பெருமைக்குரிய மாமன்னர் ராஜராஜ சோழன்.

போர்க்களத்தில் தோல்வியை அறியாத அரசராகவும், தனது ஆட்சியை உலகறியச் செய்த பேரரசராகவும் அவர் விளங்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசின் எல்லைகள் விரிவடைந்து, தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரரசாக உருவெடுத்தது.

போர் வெற்றிக்கு அடித்தளமிட்ட நான்கு ஆண்டுகள்

ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே போர்களில் ஈடுபடவில்லை. மாறாக, தனது நாட்டை வலுப்படுத்துவதிலும், நிர்வாகத்தைச் சீரமைப்பதிலும் கவனம் செலுத்தினார்.

தனது படைப்பிரிவுகளை மறுசீரமைத்து, வீரர்களுக்கு சிறந்த போர் பயிற்சிகளை அளித்தார். குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை, கடற்படை என அனைத்து பிரிவுகளையும் வலுப்படுத்தினார். இதன் காரணமாக சோழப் படைகள் எதிரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.

நாடு அமைதியாகவும் வளமாகவும் இருக்க வேண்டுமென்பதே அவரது முதன்மை நோக்கமாக இருந்தது. இருப்பினும், எதிரிகளை கட்டுப்படுத்தினால்தான் நாட்டின் வளர்ச்சி உறுதி செய்ய முடியும் என்ற சிந்தனையுடன் தனது போர் நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

சேரர் - பாண்டியர்களை ஒரே நேரத்தில் வீழ்த்திய வெற்றி

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டில், சோழ நாட்டிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சேரர்களும் பாண்டியர்களும் மீது ராஜராஜ சோழன் படையெடுத்தார். வரலாற்றில் "காந்தளூர்ச்சாலைப் போர்" என்று குறிப்பிடப்படும் இந்தப் போரில், சேரர் மற்றும் பாண்டியர் படைகள் ஒரே நேரத்தில் தோற்கடிக்கப்பட்டன. இந்த வெற்றி ராஜராஜ சோழனின் முதல் பெரிய இராணுவ சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த வெற்றிக்குப் பிறகு அவர் "மும்முடிச்சோழன்" என்ற பட்டத்தைப் பெற்றார். சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூன்று அரச மரபுகளின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதற்கான அங்கீகாரமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

இலங்கையை வென்ற கடற்படை சாதனை

ராஜராஜ சோழனின் இராணுவ வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெறுவது இலங்கைப் படையெடுப்பாகும். அப்போது இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவியது. அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ராஜராஜ சோழன் தனது வலுவான கடற்படையுடன் இலங்கைக்கு சென்று படையெடுத்தார்.

அந்தப் போரில் இலங்கை மன்னர் மகிந்தன் தோல்வியடைந்து தப்பிச் சென்றதாகவும், 1400 ஆண்டுகளாகத் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் சோழர்களால் கைப்பற்றப்பட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முக்கிய பகுதிகள் சோழப் பேரரசுடன் இணைக்கப்பட்டதுடன், அங்கு சோழப் படைத்தளங்களும் அமைக்கப்பட்டன.

வடக்கில் கங்க நாட்டைக் கைப்பற்றிய மாமன்னன்

இலங்கை வெற்றிக்குப் பிறகு தனது கவனத்தை வடக்கு நோக்கித் திருப்பினார் ராஜராஜ சோழன். அப்போது ராஷ்டிரகூடர்களின் ஆதிக்கத்தில் இருந்த கங்க நாடு சோழ நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இதனால் கங்க நாட்டின் மீது படையெடுத்த ராஜராஜன், அவர்களைத் தோற்கடித்து அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

நுளம்பர்களையும் அடக்கிய வீரர்

ராஷ்டிரகூடர்களுக்கு ஆதரவாக இருந்த நுளம்பர்களும் சோழ நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதனால் நுளம்பாடி நாட்டின் மீது போர் தொடுத்த ராஜராஜன், அவர்களையும் வெற்றிகரமாக அடக்கினார். தொடர்ந்து தடிகைபாடி பகுதியும் சோழப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.

சாளுக்கியர்களுக்கு எதிரான மாபெரும் போர்

சோழப் பேரரசின் மேற்குப் பகுதியில் மேலைச் சாளுக்கியர்கள் ஆட்சி செய்து வந்தனர். சத்யாச்ரேயன் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏற்பட்ட மோதலின் காரணமாக, ராஜராஜ சோழன் தனது மகன் ராஜேந்திர சோழனுடன் இணைந்து பெரிய படையெடுப்பை நடத்தினார்.

இந்தப் போரில் சோழப் படைகள் அபார வெற்றி பெற்றதாக கரந்தைச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. யானைப்படைகள் எதிரிகளை துவம்சம் செய்ததோடு, சாளுக்கிய படைத்தளபதி கேசவன் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு தங்க மலர்களை காணிக்கையாக வழங்கியதாக கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.

வேங்கி நாட்டிலும் வெற்றிக் கொடி

சாளுக்கியர்களைத் தோற்கடித்த பின்னர் வேங்கி நாட்டின் மீது படையெடுத்தார் ராஜராஜ சோழன். அங்கு இருந்த ஏகவீரன், படதேமன், மகாராசன் வீமன் உள்ளிட்ட பல வீரர்களை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவு வரை விரிந்த சோழ ஆதிக்கம்

ராஜராஜ சோழனின் இறுதிப் பெரிய இராணுவ நடவடிக்கையாக மாலத்தீவுகளைக் கைப்பற்றியது கருதப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் இந்தியப் பெருங்கடலில் சோழர்களின் கடற்படை ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. கடல் வர்த்தக பாதைகள் சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

தோல்வியே காணாத மாமன்னன்

சேரர், பாண்டியர், இலங்கை, கங்க நாடு, நுளம்பாடி, சாளுக்கியர், வேங்கி, மாலத்தீவு என பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் ராஜராஜ சோழன் வெற்றி மட்டுமே பெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே "போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர்" என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

மண்ணாசைக்காக அல்ல, மக்களின் நலனுக்காக போரிட்ட அரசர்

ராஜராஜ சோழனின் போர்கள் வெறும் நிலப்பரப்பை விரிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்டவை அல்ல என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எதிரிகளின் அச்சுறுத்தலிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், வர்த்தக வழித்தடங்களை பாதுகாப்பதற்கும் அவர் போர்களை நடத்தியதாக கூறப்படுகிறது. அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும், ராஜராஜ சோழன் தமிழர்களின் வீரத்திற்கும், நிர்வாகத் திறமைக்கும், தலைமைத்துவத்திற்கும் அடையாளமாக போற்றப்படுகிறார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget