கிருஷ்ணகிரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்
’’இந்த சிலையில் விஷ்ணுவின் கை ஒன்று அறுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது எனவும், இதன் மதிப்பு குறித்தும் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன், காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோரது உத்தரவின்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜராம் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், உதவி ஆய்வாளர்கள் ஷியாமளாதேவி, இராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் உள்ள சீர்காழி என்பவரது வீட்டில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடிக்கப்படும் மாலை நேர காய்கறி அங்காடி - காய்கறி வியாபாரிகள் சாலை மறியல்
அப்போது சீர்காழி என்பவரின் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 11.120 கிலோ கிராம் எடையும் சுமார் 51 செ.மீ உயரமும் கொண்ட விஷ்ணு சிலை ஒன்றும், சுமார் 8.960 கிலோ கிராம் எடையும், சுமார் 42 செ.மீ உயரமும் கொண்ட லெட்சுமி சிலை ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 ஐம்பொன் சிலைகளும் சிலைதிருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்ற 2 சிலைகளும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏடிஎஸ்பி ராஜாராம் கூறுகையில், கிருஷ்ணகிரியில் சீர்காழியின் வீட்டில் சிலை இருப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டில் சோதனையிட்டபோது இந்த இரு சிலையும் கிடைத்தது.
இந்த 2 சிலைகளும் சீர்காழியில் தந்தை கோபாலகிருஷ்ணனின் அறையில் இருந்ததாகவும், இரண்டு சிலைகளும் சில நாட்களுக்கு முன்பு இறந்த தனது தந்தை கோபாலகிருஷ்ணன் அறையில் அவரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றும், இதுகுறித்து அவரது குடும்பத்துக்கு ஏதும் தெரியவில்லை என கூறியுள்ளார். இந்த சிலையில் விஷ்ணுவின் கை ஒன்று அறுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது எனவும், இதன் மதிப்பு குறித்தும் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சிலைகள் தொடர்பாக எஸ்ஐ ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்ற பட்ட இரண்டு சிலைகளும் எந்த கோயிலுக்கு சொந்தமானவை என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என்றார்.
வாங்குறது 11 ரூபாய்; விக்கிறது 33 ரூபாய் - அரசின் கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் இடைத்தரகர்கள்