மேலும் அறிய

தஞ்சாவூர்: மக்கள் நேர்காணல் முகாம்... 288 பயனாளிகளுக்கு 1.20 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 288 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம் திருமங்கலக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் 288 பயனாளிகளுக்கு ரூ.1,20,14,140 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருமங்கலக்குடியில் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர் மாவட்டம். திருவிடைமருதூர் ஒன்றியம் திருமங்கலக்குடி கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 288 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 20 இலட்சத்து 14 ஆயிரத்து 140 மதிப்பீட்டில் வருவாய்த் துறை, சமூக பாதுகாப்பு திட்டம், வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை போன்ற பல்வேறுத் துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர்: மக்கள் நேர்காணல் முகாம்... 288 பயனாளிகளுக்கு 1.20 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பின்பு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தெரிவித்ததாவது: பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை சரகம், திருமங்கலக்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.

288 பயனாளிகளுக்கு ரூ.1,20,14,140 மதிப்பில் நலத்திட்ட உதவி

வருவாய்த் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.9,00,000 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.7,04,000 மதிப்பீட்டிலும், வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.11,90687 மதிப்பீட்டிலும், சுகாதாரத் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.22,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 6 பயனாளிக்கு ரூ.33,900 மதிப்பீட்டிலும், வேளாண் மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.5,483 மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு துறையின்சார்பில் 100 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையும், ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.20,070 மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.22,18,000 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.69,20,000 மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய கடனுதவி தொகைக்கான ஆணையினையும் என மொத்தம் 288 பயனாளிகளுக்கு ரூ.1,20,14,140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பல்வேறு நலத்திட்டங்களின் செயல்பாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலனை மனதில் கொண்டு மக்களுடன் முதல்வர், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய், மக்களைத் தேடி மருத்துவம், மக்கள் நேர்காணல் முகாம், உங்களைத்தேடி உங்கள் ஊரில் போன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி

முன்னதாக மக்கள் நேர்காணல் முகாமில் அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்  பார்வையிட்டார்.

இதில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு , ஒன்றிய துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயபால், வட்டாட்சியர் பாக்யராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் ராஜா, திருமங்கலக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பத்மினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget