மேலும் அறிய
தமிழக மக்கள் கோயிலுக்கு வருவார்களே தவிர கோயிலை பற்றி பேசுபவர்களுக்கு உதவ மாட்டார்கள் - பாரத இந்து மகா சபா மாநில தலைவர்
ஆன்மீக மக்கள் கோயிலுக்கு வருவார்களே தவிர, ஆனால் கோயிலைப் பற்றி பேசுபவர்களுக்கு உதவி செய்பவர்களாக வரவில்லை. அந்த வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய யாத்திரையாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன்
தமிழக மக்கள் கோயிலுக்கு வருவார்களே தவிர, கோயிலைப் பற்றி பேசுபவர்களுக்கு உதவ மாட்டார்கள் என அண்ணாமலையின் யாத்திரை குறித்து திருவாரூரில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டம் கழனி வாசலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சித்தர்கள் வழிபட்ட ஆலயமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகனுக்கு அருகில் காளைமுட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படும் பாலையன் சுவாமிகளுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர் இந்த ஊரில் இருந்து முருகனை வழிபட்டு வந்ததாகவும் காளை முட்டி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகனை விட பெரிய சிலை இவருக்கு அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இந்த நிலையில் இந்த ஆலயம் சிதிலமடைந்து காணப்படுவதாகவும் இந்த ஆலயத்தின் இரண்டரை ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் கூறி கிராம மக்கள் சார்பில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலை பார்வையிட அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அந்த கட்சியின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் நிரஞ்சன் ஆகியோர் வருகை தந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்பிரமணியன், ”அண்ணாமலை தனது, என் மண் என் மக்கள் என் யாத்திரையின் மூலம் கட்சியை வளர்க்க நன்றாக முயற்சிக்கிறார். இந்த யாத்திரை சோம்பி இருந்த பாஜக தொண்டர்களுக்கு ஒரு சிலர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நம்பி அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். அது இறைவன் கையில் தான் இருக்கிறது. ஆனால் தமிழக மக்களைப் பற்றி நமக்கு தெரியும். எல்லாம் ஆன்மீக மக்கள் தான் கோவிலுக்கு வருவார்களே தவிர ஆனால் கோவிலைப் பற்றி பேசுபவர்களுக்கு உதவி செய்பவர்களாக வரவில்லை. அந்த வளர்ச்சியை ஏற்படுத்க்கூடிய யாத்திரையாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இந்து மக்களிடையே இந்து விழிப்புணர்வை பாதுகாப்பு உணர்வை ஒற்றுமையை ஏற்படுத்தும் வேலையை இந்து மகா சபா செய்து கொண்டிருக்கிறது. இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. நமது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட இந்து மகா சபாவில் தேசியத் துணைத் தலைவராக இருந்தவர். அகண்ட பாரதம் அமைக்க வேண்டும். இழந்த பகுதியை மீட்பதும் இருக்கின்ற பகுதியை பாதுகாப்பதும் இந்துவினுடைய கடமை என்று அகில பாரத இந்து மகா சபா வேலை செய்து கொண்டிருக்கிறது. போன தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலை என்பதை தேசிய செயற்குழு கூடி தான் முடிவு செய்யும்” என்று அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















