மயிலாடுதுறையில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷவண்டுகளால் விவசாய வேலைகளை தவிர்க்கும் மக்கள்...!
’’ஒருவரை நான்கிற்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர் பிழைப்பது கடினம். அதேபோன்று தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிழக்க செய்யும் தன்மை கொண்டது’’
கதண்டு என்ற கொடிய விஷ வண்டு காட்டுப்பகுதிகளில் அதிகளவில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் பனைமரங்கள், தென்னை மரங்கள், பழைய கட்டிடங்களில் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து மனிதர்களை தாக்க கூடியவை. ஒருவரை நான்கிற்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர் பிழைப்பது கடினம். அதேபோன்று தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிழக்க செய்யும் தன்மை கொண்டது. சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும் அபயம் உள்ளது.
வண்டுகள் இனத்தில் கொடிய விஷம் உள்ளது. இந்த கதண்டு வண்டுகள் மயிலாடுதுறை அருகே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் தென்னை மரத்தில் மிகப்பெரிய பலாப்பழம் அளவில் கூடுகட்டி ஆயிரக்கணக்கான கதண்டு அதில் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அப்பகுதியில் அச்சத்தின் காரணமாக வயல் வேலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், அருகே குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் கதண்டுகளின் தாக்குதலுக்கு ஆளாகும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மரத்தில் கூடுகட்டியுள்ள கதண்டு கூட்டினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் கதண்டு விஷ வண்டுகள் தாக்கி தந்தை, மகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற விஷ வண்டுகள் அங்கங்கே கூடு கட்டி வருவதும், அவ்வப்போது மக்களையும், மரத்தடியில் விளையாடும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்துவதும், இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பங்களும் நடந்தேறி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்
இதனை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன், மாவட்டத்தில் உள்ள பிற தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மீட்பு பணிகள் இல்லாத நேரங்களில் இது போன்று பழைமையான மரங்கள், கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அவற்றில் கூடு கட்டியுள்ள விஷ வண்டுகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமுக ஆர்வலர்கள் பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் உயிரிழப்பு- காப்பாற்ற சென்ற இளைஞரும் பலியான பரிதாபம்