அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் உயிரிழப்பு- காப்பாற்ற சென்ற இளைஞரும் பலியான பரிதாபம்
சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மின் கம்பியை மிதித்த முதியவர் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை ரோடு சர்ச் அருகே சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் இருந்து எதிரே உள்ள வீட்டிற்கு மின்சார கம்பி கொண்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்ற டிப்பர் லாரியின் மேற்பகுதியில் பட்டு சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே சென்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான முதிவர் சிங்காரவேல் என்பவர் அந்த கம்பியை மிதித்துள்ளார்.
அதில் மின்சாரம் தாக்கி சம்பவ சிங்காரவேல் துடிதுடித்து இறந்துள்ளார். அதனைக் கண்ட அவ்வழியாக சென்ற குளங்கரை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான 25 வயதான இளைஞர் அரவிந்தன் என்பவர் உரிய பாதுகாப்பு இன்றி முதியவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் அவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்நிலை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் இதுகுறித்து சீர்காழி மக்கள் கூறுகையில் மின்சார வாரியத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு என்று கூறி நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்து மின்கம்பிகள் செல்லும் வழிகளில் இடையூறாக உள்ள மரக்கிளைகள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். ஆனால் பல வீடுகளில் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த மின் ஒயர்கள் பழுதடைந்து இருப்பதை கவனித்து அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது இல்லை, மேலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மின்கம்பம் இருக்க வேண்டும் என்ற விதிகளை மதிக்காமல் மின் இணைப்பு கூறும் நபர்களிடம் மின் கம்பத்திற்கு கட்டவேண்டாம் என கூறிவிட்டு மின்கம்பங்கள் நடாமல் சில மின்சார வாரிய அலுவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு நீண்ட தொலைவிற்கு மின் கம்பம் இல்லாமல் மின் வயர்கள் குறிப்பிட்ட அளவிற்கு கீழ் தொங்கும் வகையில் மின் இணைப்புகளை வழங்கி வருகின்றனர்.
இதனால் இதுபோன்று பல இடங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் வாகனங்களின் மேற்பகுதியில் சிக்கி தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், இன்று ஏற்பட்ட இந்த உயிரிழப்பு இருக்கும் அதுவே காரணம் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.