மேலும் அறிய

காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு

குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் எங்கள் பகுதியையே அதிகாரிகள் மறந்து விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, காலிகுடங்களுடன் ராயமுண்டான்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு: விரக்தியடைந்த மக்கள்

பூதலூர் அருகேயுள்ள ராயமுண்டான்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் பெண்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

குடிநீரைப் பெறுவதற்காக சிலர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பெண்கள் 

தொடர்ந்து நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிராம மக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தின் காரணமாக அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

குவிந்த அதிகாரிகள்... மக்களுடன் பேச்சுவார்த்தை

போராட்டம் குறித்து தகவலறிந்த வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உடனடியாக குடிநீர் விநியோகத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், கூடுதலாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும் என்றும், ஒரு வார காலத்திற்குள் நிரந்தர தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்

அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சாலை மறியலை வாபஸ் பெற்றனர். இதையடுத்து போக்குவரத்து மீண்டும் சீரானது.

இந்தப் போராட்டத்தில் ராஜாங்கம், திருமேனி, ராஜேந்திரன், அறிவழகன், பெரியசாமி, தண்டாயுதபாணி, ரமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை கிராம மக்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் எங்கள் பகுதியையே அதிகாரிகள் மறந்து விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இதனால்தான் சாலைமறியலில் ஈடுபட்டோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால்தான் தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை இல்லை என்றால் மேலும் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்தனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget