மேலும் அறிய
திருவாரூரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி பேரணி
ஹெலிகாப்ட்டரில் பயணம் செய்த இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பல்லம் என்ற பகுதியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்ட்டரில் பயணம் செய்த இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஹெலிகாப்ட்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாது பொது மக்களும் பல்வேறு அமைப்புகளும், மாணவர்களும் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலகட்ட அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திலும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூரில் ஆரூரின் அற்புதங்கள் நண்பர்கள் குழு சார்பில் புதிய ரயில்வே நிலையம் தொடங்கி, தெற்கு வீதி நகராட்சி அலுவலகம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் முப்படைத் தளபதி உள்ளிட்ட உயிர் நீத்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னார்குடியில் அனைத்து சேவை சங்க ஒருங்கிணைப்புக்குழு நேசக்கரம் சார்பில் நடத்தப்பட்ட அமைதிப் பேரணியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி வர்த்தக சங்கம், ரோட்டரி, லயன்ஸ், ஜேசிஐ உள்ளிட்ட சேவை சங்கத்தினர் ஏராளமானோர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திலிருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு, தேரடி காந்தி சிலை அருகே உயிர் நீத்த முப்படை தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு மெழுகுதி வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி, தேசிய மேல்நிலைப்பள்ளி, பின்லே மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றதோடு, பிபின் ராவத் படத்தின் முன்பு அணிவகுப்பு மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். அதே போல கோட்டூரில் திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் அமைதி ஊர்வலம் மாவட்டத் தலைவர் கோட்டூர் ராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் குடவாசல் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement