மேலும் அறிய

ஓவிய, சிற்ப கலைஞர்களே! வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிங்க: தஞ்சை மாவட்ட கலெக்டர்

தஞ்சையில் நடக்கும் ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியில் வைக்க வரும் 20ம் தேதிக்குள் கலைஞர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சையில் நடக்கும் ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியில் வைக்க வரும் 20ம் தேதிக்குள் கலைஞர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலை பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப்பயிற்சிகள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஓவியம், சிற்பக்கலையை வளர்த்திடும் நோக்கில் அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஓவியம், சிற்பக்கலை காட்சியை மண்டல அலுவலகங்களில் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது. தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட மாவட்டங்களில் (தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை) உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக்கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்திடவும், ஓவிய சிற்பக் கண்காட்சி நடத்திடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவிய, சிற்ப கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபுவழி, நவீனபாணி ஓவியங்கள், தஞ்சை ஓவியங்கள் மற்றும் அனைத்து வகையான சிற்ப படைப்புகளை வழங்க வேண்டும். அனைத்து ஓவிய, சிற்ப கலைப்படைப்புகளும்,  ஓவிய, சிற்ப கண்காட்சியில்  காட்சிப்படுத்தப்படும். அக்கலை படைப்புகள் அனைத்தும் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் அளவில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்படும்.

அதில் முதல் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 3ம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் தங்களது கலை படைப்புகளை தன் விவர குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சை- 613403 என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-232252 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பசுந்தீவன சாகுபடிக்கும், மானிய விலையில் புல்வெட்டும் கருவிபெறவும் விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். 

கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் மானாவாரி முறையில் பயனாளிகளின் நிலத்தில் தீவிர பசுந்தீவன சாகுபடி செய்ய ஏதுவாக 2024-25-ம் ஆண்டு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில்100 சதவீத மானியத்தில் பசுந்தீவன பயிர்களை சாகுபடி செய்ய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஆடு, மாடுகள் வளர்த்து வரும் அரை ஏக்கருக்கு குறையாமல் 22 ஏக்கர் நிலத்தினை கொண்ட விவசாயிகள் பயனடையலாம். தீவன சோளம், காராமணி விதைகள் ஆகியவற்றை விதைத்து உரங்களை இட்டு சாகுபடி செய்து பசுந்தீவன உற்பத்தியை பெருக்கலாம். இதில் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தீவன விதைகள் மற்றும் இடுபொருட்களை வழங்கி பசுந்தீவன சாகுபடியை அரசு ஊக்குவிக்கிறது. நீர்ப்பாசன முறையில் பசுந்தீவன சாகுபடி செய்ய விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். ஏக்கருக்கு ரூ.5,500 மதிப்புள்ள விதைகள் மற்றும்இடுபொருட்களை அரசு வழங்குகிறது.

இதே போல் பசுந்தீவன பயன்பாட்டினை மேம்படுத்த ஏதுவாக 50 சதவீத மானிய விலையில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் புல் வெட்டும் கருவிகளை வினியோகம் செய்ய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த திட்டத்திற்கு மின் சாரம் மூலம் இயக்கப்படும் ஒரு புல்வெட்டும் கருவிக்கு ரூ.16 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், பசுந்தீவன சாகுபடி செய்ய தேர்வு செய்துள்ள நிலத்தின் சிட்டா அடங்கல் நகல் ஆகியவற்றை இணைத்து அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் வருகிற 6ம் தேதிற்குள்  விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget