மேலும் அறிய

தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு

’’வல்லம் பேரூராட்சியை இணைக்கும் முடிவை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டும், தவறும் பட்சத்தில் காலவரையற்ற போராட்டம்  நடத்தப்படும் என வல்லம் பொது நலக்குழு அறிவிப்பு’’

ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தின் முதல் நகராட்சியாக தஞ்சாவூா் நகராட்சி 1866 ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பழமையான நகராட்சிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகராட்சி 1943ஆம் ஆண்டில் முதல்நிலை நகராட்சியாகவும், 1963ஆம் ஆண்டில் தோ்வு நிலை நகராட்சியாகவும், 1983ஆம் ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. தொடா்ந்து, இந்த நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, 2014 ஆம் ஆண்டு பிப். 19ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மாநகராட்சிக்கேற்ற பரப்பளவு, மக்கள்தொகை இல்லாமல் உள்ளது.  இதனால் நகராட்சியாக இருந்த காலத்தில் உள்ள 51 வார்டுகள், மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு நீடிக்கிறது. எனவே தஞ்சாவூரைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகள், வல்லம் பேரூராட்சியைச் சோ்க்க 2014 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சித் தோ்தலின்போது வார்டு மறுவரையறை செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு

இதனிடையே, 2019 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றபோது, தஞ்சாவூா் மாநகராட்சியுடன் சோ்க்க திட்டமிடப்பட்டிருந்த 11 ஊராட்சிகளிலும் தோ்தல் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினா்கள், தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் உள்பட 4 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என சட்ட மன்ற கூட்டத்தொடரில் 24 ஆம் தேதி நடைபெற்ற நகராட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இதன்படி தஞ்சாவூா் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சி, புலவர் நத்தம்,  கடகடப்பை, மாரியம்மன்கோவில், புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையார்பட்டி, நீலகிரி, இராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி, கத்திரிநத்தம், ஆலங்குடி, மணக்கரம்பை ஆகிய 15 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், மாரியம்மன்கோவில் அருகேயுள்ள ஆலங்குடி, புலவா்நத்தம் ஊராட்சிகளில் ஒரு பகுதியும் சோ்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அப்போது வல்லம் பேரூராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு

வல்லம் பேரூராட்சியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சாவூர் நகரம் உள்ளதும். மேலும் வல்லத்தை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அதை விடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியோடு இணைக்க கூடாது. இந்த ஊரை மாநகராட்சியோடு இணைத்தால் பொது மக்களுக்கான வரியினங்கள் உயரும், ஆனால் மாநகராட்சிக்கான எந்த அடிப்படை வசதியும் கிடைக்கப் போவதில்லை, இது தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, மீறி இணைக்க முயன்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என கருத்துக்களை பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு

அதனை தொடர்ந்து கடந்த மாதம் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த இருந்தனர். பின்னர் எம்.பி., பழனிமாணிக்கம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடையடைப்பு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் வல்லம் பொது நலக்குழு சார்பில் அண்ணாசிலை அருகில் கூட்டம் நடந்தது. இதில் தனசேகர் தலைமை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் பொன்னுசாமி, சிங்ஜெகதீசன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் அர்ஜுனன், பொது நலக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகையன், வல்லம் வணிகர் சங்க தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் ஆதரவு  கோரி பேசினர். தொடர்ந்து வல்லம் பேரூராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடத்தினர். தஞ்சாவூர் மாநகாராட்சியுடன, வல்லம் பேரூராட்சியை இணைக்கும் முடிவை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டும், தவறும் பட்சத்தில் காலவரையற்ற போராட்டம்  நடத்தப்படும் என வல்லம் பொது நலக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle | மீண்டும் அரியணையில் செ.பாலாஜி!புதிதாக சீனுக்கு வந்த 3 பேர்! யாருக்கு எந்த துறை?CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Sri Lanka Vs New Zealand:
Sri Lanka Vs New Zealand:"ஒரு சூறாவளி கிளம்பியதே" - நியூசிலாந்தை ஓட விட்ட இலங்கை! 15 வருடங்களுக்குப் பிறகு சாதனை
Embed widget