மயிலாடுதுறை ஆட்சியரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் - 3500 மெட்ரிக் டன் நெல் வீணாகும் அபாயம்
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இயங்கிவரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் தற்போது பெய்து வரும் மழையால் 3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே டி.மணல் மேடு கிராமத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு சீர்காழி தாலுக்காவில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்படும் 3500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இந்த திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நெல் சேமிப்பு கிடங்கு தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளதால் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் சேமிப்புக் கிடங்கை சுற்றி தண்ணீர் தேங்கியதால் அங்கு அடுக்கி வைத்திருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்படைந்து முளைக்கத் தொடங்கின.
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு செய்து தாழ்வான பகுதியில் இயங்கி வந்த இந்த சேமிப்புக் கிடங்கை மூடுவதற்கு உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சேமிப்பு கிடங்கை மூடி நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதாக ஆட்சியரிடம் உத்தரவாதம் அளித்து இருந்தனர்.
Delhi Weather:புதுடெல்லி: அடுத்த ஆறு நாட்களில் வெயில் வாட்டி எடுக்கும் - இந்திய வானிலை மையம்
இந்ந சூழலில் 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை நெல் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றாமல், மேலும் தற்போது கொள்முதல் செய்து வரும் புதிதாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் சேமிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் சேமிப்பு கிடங்கை சுற்றி மீண்டும் தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது. மேலும் சரியான முறையில் தார்பாய்கள் கொண்டு மூடாமல் பாதுகாக்கப்படாமல் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் அரும்பாடு பட்டு விளைவித்த நெல்களை அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு வீணாகுவதாகவும், உடனடியாக இந்த திறந்தவெளி மேல் சேமிப்புக் கிடங்கை ஆட்சியரின் உத்தரவை ஏற்று வேறு இடத்திற்கு மற்ற வேண்டும் என்றும், ஆட்சியரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலை பாடத்திட்டம் மாற்றி அமைப்பு - அமைச்சர் பொன்முடி