மேலும் அறிய
Advertisement
நெல் விற்பனைக்கு வந்த வெளிமாவட்ட லாரிகள் பறிமுதல்!
மன்னார்குடி பகுதியில் வெளிமாவட்ட வணிகர்களின் நெல் மூட்டைகளை கொண்டு வந்த 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு தற்போது அறுவடை பணிகள் முடிவடைந்து நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட வியாபாரிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்து கொண்டு உள்ளன.
இந்நிலையில் இன்று மன்னார்குடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகள் விற்பனை செய்வதற்கு வந்திருப்பதாக மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் வடசேரி சாலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர்.அப்பொழுது மன்னார்குடி பகுதியில் வெளிமாவட்ட வணிகர்களின் நெல் மூட்டைகளை கொண்டு வந்த 3 லாரிகள் கைப்பற்றுகை செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது விசாரணையில் மதுரை மாவட்டத்திலிருந்து 2 லாரிகளிலும் மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு லாரி மூலமாக நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில்... திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது 104 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் நேரடியாக விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் கள்ளத்தனமாக விவசாயிகள் என்ற போர்வையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் திடீர் ஆய்வு செய்யப்பட்டதில் மன்னார்குடி பகுதியில் வெளிமாவட்ட வணிகர்களின் நெல் மூட்டைகளை கொண்டு வந்த 3 லாரிகள் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலரால் கைப்பற்றுகை செய்யப்பட்டு பாதுகாப்பாக சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட லாரிகளில் உள்ள நெல் மூட்டைகளின் எடை 73 மெ.டன் ஆகும். மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தாள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரித்துள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion