மேலும் அறிய

119 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க: கடைசி தேதிக்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு!!! 

119 காலிப்பணியிடங்களுக்கு மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: மத்திய அரசு நிறுவனத்தில் 119 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.
 
மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) உள்ள 119 காலிப்பணியிடங்களுக்கு மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் BEML நிறுவனம், இந்திய பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ், மைனிங் மற்றும் கட்டமைப்பு, ரயில் மற்றும் மெட்ரோ ஆகியவற்றுக்கு பல்-தொழில்நுட்பத்தில் உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் நிறுவனமான செயல்படுகிறது. சுமார் 6 நூற்றாண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு பல பிரிவுகளில் காலியாக உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

ஜூனியர் நிர்வாகி - மெக்கானிக்கல் 88
ஜூனியர் நிர்வாகி - எலெக்ட்ரிக்கல் 18
ஜூனியர் நிர்வாகி - உலோகவியல் 2
தகவல் தொழில்நுட்பம் 1
நிதி 8
ராஜ்பாஷா 2 என மொத்தம் 119  காலிபணியிடங்களை நிரப்ப இருக்காங்க.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபடியான வயது வரம்பு 29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பிற்கான கட்-ஆஃப் தேதி செப்டம்பர் 26 ஆகும்.

மெக்கானிக்கல்/எலெக்ட்ரிக்கல்/உலோகவியல் பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல் ஆகியவற்றில் முழு நேர பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேசிய அளவில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் வழங்கப்படும்.

ஐடி பிரிவில் உள்ள இடங்களுக்கு கணினி அறிவியல், ஐடி அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கேரளா பாலக்காட்டில் பணி நியமனம் வழங்கப்படும். நிதி பிரிவில் உள்ள இடங்களுக்கு CA-Inter / CMA-Inter அல்லது இரண்டு ஆண்டு எம்பிஏ தேவை. எங்கு வேண்டுமாலும் பணி நியமனம் அளிக்கப்படும்.

ராஜ்பாஷா பிரிவு இடங்களுக்கு ஆங்கிலத்துடன் இந்தி மொழியில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது இந்து உடன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தி தட்டச்சு அவசியம். ஹைதராபாத், பெங்களூருவில் பணி வழங்கப்படும். பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுபவம் அவசியமில்லை. அதே போன்று 1 முதல் 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்கள் 4 வருடத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். முதல் வருடம் ரூ.35,000, இரண்டாம் வருடம் ரூ.37,500, மூன்றாம் வருடம் ரூ.40,000 மற்றும் 4ஆம் வருடம் ரூ.43,000 வழங்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை ரூ.11,000 இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜூனியர் நிர்வாகி பதவிகளுக்கு 2 மணி நேர கணினி வழி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். ராஜ்பாஷா பதவிக்கு மட்டும் 10 நிமிட தட்டச்சு தேர்வு கூடுதலாக நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் 5 சதவீதம் தளர்வு உள்ளது. தேர்விற்கு விண்ணப்பதார்கள் சொந்த செலவில் வர வேண்டும். தேர்வு குறித்த விவரம் அட்மிட் கார்டில் இடம்பெறும். தேர்வு தேதி அறிவிக்கப்படுவதைத் தொடர்ந்து, அட்மிட் கார்டு வெளியிடப்படும்.

ஆர்வமுள்ள பட்டதாரிகள் https://www.bemlindia.in/careers/ என்ற இணைப்பின் மூலம் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் வரும் செப்.26-ம் தேதி வரை பெறப்படுகிறது. கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. 

தயாராக வைத்துகொள்ள வேண்டிய ஆவணங்கள்

புகைப்படம். விண்ணப்பதாரின் கையொப்பம். வகுப்பு சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ்.  10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். பொறியியல், பட்டப்படிப்பு, CA/CMA சான்றிதழ். முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ். அனைத்து செமஸ்டர் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், இந்தி தட்டச்சு திறன் சான்றிதழ், அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு),  சுயவிவர படிவம் (Resume).

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.09.2025 மாலை 6 மணி வரை. எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.
ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எனவே, விண்ணப்பதார்கள் அனைத்து ஆவணங்களையும் தெளிவாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல், கலை, நிதி சார்ந்த படிப்புகள் முடித்தவர்கள் இதை சிறப்பானதாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget