மேலும் அறிய

ஜாக்கிரதை மக்களே ஜாக்கிரதை... இதிலும் மோசடி செய்கிறார்கள்!!! சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்கும் மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை.

தஞ்சாவூர்: குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய மோசடி நடந்து வருகிறது. இதில் யாரும் பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் இதற்காக தற்காலிக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு புதிய ரகங்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விற்பனை தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளது.

ஆன்லைனிலும் பட்டாசு விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இப்போது இருந்தே பட்டாசு சத்தம் கேட்க தொடங்கிவிட்டது. பட்டாசுகளை வெடிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் உள்ளனர். பல கிராமங்களில் சிறுவர்கள் தற்போதே பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சி அடைய வேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டாசுகளை இப்போதே வாங்க தர தொடங்கிவிட்டனர்.

ஜாக்கிரதை மக்களே ஜாக்கிரதை... இதிலும் மோசடி செய்கிறார்கள்!!! சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை

இதை பயன்படுத்தி கொண்டு சிலர் போலியான இணையதளங்களை உருவாக்கி குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இணையதளங்களில் வெளியாகும் 90 சதவீத சலுகை விலையில் பட்டாசுகள் விற்பனை போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது பட்டாசு விற்பனை தொடர்பாக ஆன்லைன் மோசடி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தினமும் 5க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்கும் மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளதாவது:

பொதுமக்கள் பட்டாசு வாங்கும் இணையதளத்தின் சட்டப்பூர்வமான தன்மையை சரிபார்க்க வேண்டும். பிரபலம் இல்லாத இணையதளங்களில் பட்டாசுகளை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பொருட்கள் கைக்கு வந்தவுடன் பணம் கொடுக்கும் சேவையை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதில் கவனமாக இருப்பது அவசியம். இதன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் சரியாக வந்து சேர்வதை உறுதி செய்யலாம். மோசடி இணையதளத்தில் பணம் இழப்பதை தவிர்க்கலாம்.

போலியான இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து இருந்தால் வங்கி கணக்குகளை கண்காணிக்க வேண்டும். போலியான இணையதளத்தில் பட்டாசு வாங்க முயன்று யாரேனும் பணத்தை இழந்திருந்தால் உடனடியாக தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம். இதுபோன்ற மோசடியில் சிக்கினால் சைபர் கிரைம் பிரிவை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ww.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்து பொதுமக்கள் ஏமாந்து விட வேண்டாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget