மேலும் அறிய
Advertisement
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு; பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்தபோது நேர்ந்த சோகம்
இடிபாடுகளில் சிக்கி இருந்த நான்கு சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நாகை அருகே வீடு சுத்தம் செய்யும் பொழுது சிமெண்ட் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தில் ஒரு சிறுவன் மருத்துவமனை கொண்டு வரும் வழியில் உயிரிழந்த நிலையில் மூன்று சிறுவர்கள் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புலியூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான காலனி வீட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேகரின் தம்பி மகன் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் நரேஷ் வெற்றிவேல் லிவிங் ராஜ் ஆகியோர் இன்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காலணி வீட்டில் சிமெண்ட் மேற்கூரை திடீரென இடிந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் நான்கு சிறுவர்களும் வீட்டின் உள்பகுதியில் ஈடுபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த நான்கு சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அஜித் மருத்துவமனை வரும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் 3 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக மழை நீர் ஊறி வீட்டில் சிமெண்ட் மேற்கூரை வலுவிழந்து இருந்த நிலையில் சிறுவர்கள் தூய்மை பணியின் போது வீடு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion