Budget Cars: டாக்ஸிலாம் வேண்டாம்.. ரூ.5 லட்சத்துகே சொந்த கார் - 6 ஏர் பேக்குகள், லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், 7 கலர்
Maruti Suzuki Alto K10: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் எரிபொருள் செயல்திறன் மிக்க, சிறிய குடும்பங்களுக்கு உகந்த பட்ஜெட் கார் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்

Maruti Suzuki Alto K10: மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்ட்டோ கே10 கார் மாடலின் ஆன் - ரோட் விலை, சென்னையில் ரூ. 4.96 லட்சம் மட்டுமே ஆகும்.
மாருதி சுசூகி ஆல்டோ கே10:
பரபரப்பான நேரத்தில் நேரமின்றி ஒட்டுமொத்த மனித இனமும் ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த பயணத்தை பொதுப்போக்குவரத்து கால விரயம், சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை, எரிபொருள் செலவு, வாடகை வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் போன்ற இடர்பாடுகளில் இருந்து மேம்பட்டதாக மாற்ற, இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றதாக விற்பனை செய்யப்படும் கார் தான் மாருதி சுசூகியின் ஆல்டோ கே10. நீண்டகாலமாக சந்தையில் உள்ள இந்த காரானது அண்மையில் தான், அப்கிரேட் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடுதல் அம்சங்கள் நிறைந்த இந்த காரானது, குறைந்த பட்ஜெட்டில் நல்ல காரை சொந்தமாக்க விரும்புவோருக்கு நல்ல தேர்வாக இருக்கும். இந்த காரின் நீளம் 3530 மிமீ, அகலம் 1490 மிமீ மற்றும் உயரம் 1520 மிமீ. இதன் வீல் பேஸ் 2380 மிமீ ஆகும்.
மாருதி சுசூகி ஆல்டோ கே10 விலை:
பெட்ரோல் மற்றும் சின்ஜி என மொத்தம் 8 வேரியண்ட்களில் கிடைக்கும் ஆல்டோ கே10 கார் மாடலின் விலை, சென்னையில் ரூ.4.96 லட்சம் (ஆன் - ரோட்) தொடங்கி ரூ.7.31 லட்சம் வரை நீள்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 24.39 கிமீ, ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 24.9 கிமீ மைலேஜும் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 33.85 கிமீ மைலேஜ் வழங்குவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. காரானது சாலிட் ஒயிட், மெடாலிக் சில்கி சில்வர், மெடாலிக் கிரானைட் கிரே, மெடாலிக் ஸ்பீடி ப்ளூ, மெடாலிக் சிஸ்லிங் ரெட், பிரீமியம் எர்த் கோல்ட் மற்றும் புளூயிஷ் கோல்ட் ஆகிய 7 வண்ண விருப்பங்களில் இந்த ஆல்டோ கே10 கார் மாடல் கிடைக்கிறது.
மாருதி சுசூகி ஆல்டோ கே10 - 6 ஏர் பேக்குகள்:
காம்பேக்ட் ஹேட்ச்பேக்கான ஆல்டோ கே10 காரில் 5 பேர் தாராளமாக பயணிக்கும் வகையில் இடவசதி உள்ளது. நகர்ப்புற தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக இருக்கும். பாதுகாப்பிற்காக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ஆண்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுவதன் மூலன், பயணிகளின் பாதுகாப்பு மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி ஆல்டோ கே10 - அம்சங்கள்:
புதிய ஆல்டோ கே10 மாடலில் இன்ஜினில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. அதன்படி, 998cc 3 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் தொடர்கிறது. இது 5500rpm-ல் அதிகபட்சமாக 65 bhp ஆற்றலையும், 3,500rpm-ல் அதிகபட்சமாக 89 Nm இழுவை திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. உட்புறத்தில் சிங்கிள் டோன் டேஷ்போர்ட், டூயல் டோனில் ஃபேப்ரிக் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. டாப் ஸ்பெக் வேரியண்டான VXi+ 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரி, ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், மேனுவலி அட்ஜெஸ்டபள் அவுட்சைட் ரியர்வியூ மிர்ரர் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.





















