கார் மோதி காணாமல் போன 6 வயது சிறுமி... அதே காரில் சடலமாக மீட்பு.. ஒருவர் கைது
கொர்பா மாவட்டத்தின் ஹார்டிபஜார் பகுதியில் போலீசார் வழக்கமாக நடத்திய வாகன சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

சத்தீஸ்கரின் ஜஞ்ச்கிர்-சம்பாவில் கார் மோதி காணாமல் போன 6 வயது சிறுமி, ஒரு நாள் கழித்து அதே வாகனத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய சிறுமி:
பாலக் பட்டேல் என்கிற சிவாங்கி என்று அழைக்கப்படும் அந்தச் சிறுமியின் உடல், வெள்ளிக்கிழமை கொர்பா மாவட்டத்தின் ஹார்டிபஜார் பகுதியில் போலீசார் வழக்கமாக நடத்திய வாகன சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
காரை ஓட்டி வந்த 65 வயதான தேவேந்திர பிரசாத் வர்மா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் தகவல்:
"வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஜஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பலோடா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பச்சோத் கிராமத்திற்கு அருகே அடையாளம் தெரியாத கார் சிறுமியின் மீது மோதியது. காரை ஓட்டி வந்தவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்வதாக அங்கு கூடியிருந்தவர்களிடம் கூறினார். இருப்பினும், அருகிலுள்ள எந்த மருத்துவமனையிலும் அவரது பெற்றோரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை," என்று அந்த அதிகாரி கூறினார்.
புகாரளித்த பெற்றோர்:
விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் வழங்கிய விவரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற தொழில்நுட்ப ஆதாரங்களை பயன்படுத்தி போலீசார் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், காரை கோர்பா மாவட்டத்தின் ஹார்டிபஜார் பகுதியில் போலீசார் சோதனையின் போது கண்டுபிடித்தனர்
இது குறித்து பேசிய காவல் அதிகாரி ஒருவர் "இரவு வரை சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், பலோடா காவல் நிலையத்தில் விபத்து மற்றும் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குழுக்கள் தேடுதலைத் தொடங்கின. விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், கோர்பா மாவட்டத்தில் உள்ள ஹர்திபஜார் காவல் நிலைய எல்லையில் கார் கண்டுபிடிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற ஊழியர் கைது:
காரில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் (SECL) நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியரான வர்மா கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
"சம்பவங்களின் எப்படி நடந்தது, சிறுமி எப்படி இறந்தாள் என்பதையும் அறிய கைது செய்யப்பட்ட வர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,"






















