மேலும் அறிய
Advertisement
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
முதல்வர், ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைறவேற்றற வேண்டும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 2வது நாளாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றறது. தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் 5 தேதி வரை ஆசிரியர்கள் கோரிக்கை அடங்கிய கருப்பு அட்டையை அணிந்த பணிக்கு செல்ல எடுத்த முடிவின்படி கருப்பு அட்டை அணியும் போராட்டம் இன்று 2வது நாளாக நடைபெறுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். அரசு பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். மேற்பரப்பு படித்த அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மறுக்கிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
அதன்படி, 5 நாள்களுக்கு கருப்பு அட்டை அணிந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் பணிக்கு செல்வது. தொடர்ந்து மார்ச் 18ல் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டமும், ஏப்ரல் 8 இல் மாநில தலைநகரில் உண்ணாவிரதமும், மே 2 இல் மாநில தலைநகரில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது. முதல்வர், ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைறவேற்றற வேண்டும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இங்கே ஏழு நீதிமன்றங்கள் உள்ள நிலையில் அதற்கான நீதிபதிகள் மூன்று பேர் மட்டுமே இருப்பதாகவும் மூன்று நீதிபதிகளே 7 நீதிமன்றங்களையும் நிர்வகித்து வருவதால் வழக்குகள் தேங்கி காலதாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருவதாகவும், இதே போல நீதிமன்ற பணியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி உடனடியாக காலியாக உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நான்கு நாட்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளில் நீதிமன்ற வாயில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion