மேலும் அறிய
Advertisement
இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பிய 12 மீனவர்கள் - உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்த மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரமான விசைப்படகை மீட்டுத்தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை
தமிழகத்தின் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த ஜனவரி 27 மற்றும் 29 ஆம் தேதி நள்ளிரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து விசைபடகு மற்றும் மீன் வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 29 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென அவர்கள் குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் தமிழக முதல்வர், மத்திய அரசு வெளியுறவுத்துறை மூலமாக தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். இதன் மூலம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் கடந்த 21 தேதி விடுதலை செய்தது. இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 29 மீனர்வகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தினர்.
பின்பு 29 மீனவர்களையும் மீனவர்களையும் நேற்று இரவு விமானம் மூலம், இலங்கையில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து வாகனம் மூலமாக அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாகப்பட்டினம் துறைமுகம் வந்த 13 மீனவர்களையும் அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்த மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரமான விசைப்படகை மீட்டுத்தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் இருநாட்டு மீனவர்களும் பரபரப்புடன் கடலில் மீன்பிடி தொழில் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு அச்சமின்றி கடலில் மீன்பிடித் தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயகம் திரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion