மேலும் அறிய
Advertisement
நாகை: சிபிசிஎல்; நீதிமன்றம் அறிவிப்பை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய விவசாயிகள்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விளக்கி கொண்டனர்.
சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டி நிறுவனத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வரும் 12ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விளக்கி கொண்டனர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 698 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர்.
இந்த நிலையில், பனங்குடி கிராமத்தில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான CPCL நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும், என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு புதிய நில எடுப்பு 2013 ஆம் ஆண்டு சட்டம் பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 12ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தது. போராட்டக்காரர்கள் நீதிமன்ற உத்தரவை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். நீதிமன்ற உத்தரவு வரும் வரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவு மீறினால் போராட்டத்தில் இறங்கும் தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion