மேலும் அறிய
விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது நடுக்கடலில் தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி Nagai district One person lost his life in an attack between fishermen in the middle of the sea - TNN விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/f8c64f2354c8f9022efc13904a5c3dc81708954690129113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மீனவர்கள்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலத்திநாதன் ஆகிய மூவரும் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று மீன்பிடிக்க சென்ற இவர்கள் கரையில் இருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் நடுக்கடலில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே தொழிலுக்கு சென்ற கோகிலா என்ற பெயருடைய விசைப்படகு இவர்களது வலைகளை அறுத்து சென்றதாகவும், அவர்களை எதிர்த்து கேட்டதாகவும், இதனால் விசைப்படகு மீனவர்கள் பைபர் படகின் மீது மோதியாகவும் கூறப்படுகிறது. அப்போது இருதரப்பு மீனவர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விசைப்படகு மீனவர்கள் பைபர் படகின் மீது மோதி மீன்பிடி உபகரணங்கள் கொண்டு அவர்கள் மீது கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் படகு கவிழ்ந்து மூன்று மீனவர்களும் கடலில் குதித்து தப்பிக்க முயன்றபோதும் விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டதில் சிவநேசசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்,காலத்திநாதன் கடலில் மாயமானார். சகோதரர்கள் இருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெறுவதை தன்கண்முன்னே நடைபெறுவதை பார்த்த ஆத்மநாதன் படுகாயங்களுடன் கடலில் மூழ்கி அங்கிருந்து தப்பி சக மீனவர்களின் உதவியோடு நாகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
![விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/8d50dc24540cfda191c057e76db47d0d1708954903163113_original.jpg)
பின்னர் இதனை அறிந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழந்து மிதந்த சிவநேசசெல்வம் சடலத்தை மீட்ட நிலையில், காலத்திநாதனை கடலோர காவல்குழும போலீசாரின் உதவியோடு தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது நடுக்கடலில் தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து மற்றொரு சகோதரர் மாயமான நிலையில் கை முறிவு ஏற்பட்டு படு காயங்களுடன் மற்றொருவர் மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியின் சோகத்தையும் இந்நிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் அக்கரைப் பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைமுறிவு மற்றும் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் மீனவரை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
![விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் - மீனவர் கண்ணீர் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/26/e00b0ba3766ee06d479396d29f38e6a01708955434414113_original.jpg)
தங்களை விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உயிர்ப்பிழைத்த மீனவர் ஆத்மநாதன் கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த நிலையில் படகை இயக்கிய அதன் உரிமையாளர் பாலகுமார் தலைமறைவாகிய நிலையில், பைபர் படகு மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீதர் , காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டபாணி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion