மேலும் அறிய
பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி
ஒன்றிய பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் ; பதிலடி கொடுத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
![பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி Minister Raghupathi says It was Edappadi who betrayed Tamil Nadu along with the BJP government -TNN பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/19/b4cc0353947f1497b25bcc13d7b1e1d91697723957669113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரகுபதி, தமிழக சட்டத்துறை அமைச்சர்
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு துறையினரின் பேரிடர் மீட்பு கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர், பருவமழை காரணங்களில் 24 மணிநேரமும் பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
![பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/19/fd32e3dfbd8b96fc7a97c9985ea4722b1697724058544113_original.jpg)
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஐந்தாயிரம் மணல் முட்டைகள், 65 ஆயிரம் காலி சாக்கு பைகள், 73 திருமண மண்டபங்கள் 145 பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் சமுதாயக்கூடங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மத்தியில் ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு துரோகம் மட்டுமே செய்கிறது என்று எடப்பாடி தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமிதான் ஒன்றிய அரசோடு சேர்ந்து தமிழ்நாட்டிற்கு அதிக துரோகம் செய்பவர் வேறு யாரும் கிடையாது. திமுக துணையோடு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழக மக்களின் நலன் காக்கப்படும் அதில் எந்த சந்தேகமுமில்லை என்று கூறினார்.
![பாஜக அரசோடு இணைந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான் - அமைச்சர் ரகுபதி பதிலடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/19/47c7170595ca135cf5bfe1f6f761ce011697724104682113_original.jpg)
அமைச்சர் செந்தி்பாலாஜி ஜாமின் மறுப்பு குறித்து கேட்ட கேள்விக்கு, நீதிபதிகள் நீதிமன்ற நடவடிக்கை குறித்து கேள்வி கேட்பதும் பதில் சொல்வதும் சரியல்ல என்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் திருபனோத் மிருகேந்த லால், நகர மன்றத் தலைவர், மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) அரங்கநாதன் மற்றும் பேரிடா மேலாண்மை வட்டாட்சியர் கார்த்திகேயன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion