மேலும் அறிய

மேட்டூர் அணை திறப்பு - கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றுக்குள் கால்நடைகளை யாரும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என கோரிக்கை

மேட்டூர் அணை நிரம்பி வருவதால் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், அந்த நீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் என்பதால் ஆறுகளின் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை திறப்பு - கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளான 640 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருவதால், அதனை கண்காணிக்கவும், மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளாக 195 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அதன் உபரி நீர் திறக்கப்பட இருப்பதால், ஆற்றங்கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட இருப்பதால் அதன் கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  இது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்து வருகின்றோம். கொள்ளிடம் ஆற்றுக்குள் கால்நடைகளை யாரும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.

மேட்டூர் அணை திறப்பு - கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் பொதுமக்கள் ஆற்றங்கரைக்கும், ஏரிகளுக்கும் தேவையில்லாமல் செல்ல வேண்டாம், பொதுமக்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை நீர் வடிய தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் துார் வாரப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 24 மணி நேரம் செயல்படும் எண் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தயார் நிலையில் உள்ளது. மேலும்,  மழைவெள்ள  பாதிப்புகளை தடுக்கும் விதமாக 115 இடங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதே போல் களப்பணியில் ஈடுபடுத்த பணியாளர்களும் தேவையான அளவு உள்ளனர்.

மரங்கள் கீழே விழுந்தால் உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்களும் போதிய அளவு உள்ளது. ஜேசிபி இயந்திரங்களும், ஜென்ரேட்டர் இயந்திரங்களும் தேவையான அளவு உள்ளது. மழை பாதிப்புகளை கண்காணிக்க மண்டல அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள், மழை நீர் தேங்கி பொது மக்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக களத்தில் இறங்கி, பணியாற்றுவதற்கு அனைத்து அதிகாரிகளுக்கும்  உத்தரவிட்டுள்ளோம், வரும் வடகிழக்கு பருவ மழை மற்றும் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டாலும், பொது மக்கள் யாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
"இரவில் அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்” எதற்கு தெரியுமா..?
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்Dr Sharmika Slams TN Police |”1000 ரூபா FINE-ஆ?”பொங்கி எழுந்த ஷர்மிகா!U TURN அடித்த TRAFFIC போலீஸ்!TVK Vikravandi Maanadu  | ”மாநாடு நடக்குமா புஸ்ஸி?” புலம்பி தள்ளும் விஜய் ஆரம்பமே சறுக்கலா?Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
"இரவில் அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்” எதற்கு தெரியுமா..?
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Rain Holiday: நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம்.!
நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம்.!
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்:  பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்: பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
Governor About Chennai Rain:
Governor About Chennai Rain: "மழைப்பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்" -ஆளுநர் ஆர்.என்.ரவி
Diwali Gift: ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ்; தீபாவளிக்கு பரிசா கார்,பைக் வழங்கிய சென்னை நிறுவனம்!
Diwali Gift: ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ்; தீபாவளிக்கு பரிசா கார்,பைக் வழங்கிய சென்னை நிறுவனம்!
Embed widget