மயிலாடுதுறையில் பூட்டிய வீடுகளில் திருடியவர் கைது; சுமார் 30 சவரன் தங்க நகைகள் பறிமுதல்
மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் கொள்ளையடித்த திருடனை, மயிலாடுதுறை போலீஸார் பிடித்து நகைகளை மீட்டுள்ளனர்.
மயிலாடுதுறையை அடுத்த வானதிராஜபுரம், மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் பிரகாஷ். இவர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று தனது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை ஆகஸ்ட் 26ஆம் தேதி காலையில் வந்து பார்த்தபோது அடையலாம் தெரியாத நபர்களால் பூட்டியிருந்த தனது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ் இது குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் குத்தாலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்தக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் இளையராஜா, ஆத்மநாதன் ஆகியோரின் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக்குமார், செந்தில்குமார் மற்றும் காவலர் கார்த்திக் ஆகிய அடங்கிய ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா, அந்தனகுரிச், ஓம்சக்தி கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் 26 வயதான மகன் ரமணி என்பவர் தொடர் குற்றச் செயல் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் இவரை விசாரணை செய்ததில் பிரகாஷ் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரமேஷை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து வளையல், செயின், மோதிரம், தோடு உள்ளிட்ட தங்க நகைகள் சுமார் 30 சவரன் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு திருடியவரை பிடித்த தனிப்படை போலீசாருக்கு மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் நிஷா பாராட்டுகள் தெரிவித்தார்கள்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள எளியவர்களுக்கு விலை இல்லா பால், முட்டை மற்றும் ரொட்டியை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!
நடிகர் விஜய்யின் 48 வது பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்றாலும், அன்று மட்டும் இன்றி ஆண்டு முழுவதும் விஜய் பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொண்டாட இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்து இருந்தனர்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு வகைகளில் பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறனர். முன்னதாக கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் ஏராளமான உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினால் செய்து வந்தனர். மேலும், ஆதரவற்றோர் இல்லங்கள், அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி அரசு மருத்துவமனைகளில் பிரசவம் ஆகும் தாய் மற்றும் குழந்தையை இலவசமாக வீடுகளில் அழைத்துச் செல்ல வாகன வசதி என உதவிகளை செய்தனர். இந்நிலையில் அதன் ஒன்றாக மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்த முதியோருக்கு பால், முட்டை மற்றும் ரொட்டி விலை இல்லாமல் வழங்கினர். மாவட்ட பொருளாளர் தளபதி சுமன் முன்னிலையில் மயிலாடுதுறை நகர தலைவர் கீர்த்தி வாசன் தலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.