மேலும் அறிய

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர் 3 மத முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

திருமணங்களில் சம்பரதாய திருமணம், சீர்திருத்த திருமணம், பதிவு அலுவலக திருமணம், கோயில் திருமணம் என பல வகை திருமணங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பெரும்பாலான திருமணங்கள் மணமக்களின் மத சம்பரதாய திருமணங்களாகவே நடைபெறும். ஆனால், மயிலாடுதுறையில் ஒரே ஜோடி இந்து, கிறித்துவ, இஸ்லாமிய என மும்மத முறைப்படி திருமணம் செய்துகொள்வது என்பது இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்றாகும்.  

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

இந்த அதிசய திருமணம் மயிலாடுதுறையில்  நடைபெற்றுள்ளது. அதுவும் அரசு ஊழியர் ஒருவர் துணிச்சலாக, தனது நண்பர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த திருமணத்தை செய்துள்ளார்.  மயிலாடுதுறை சேர்ந்த பொறியியல் பட்டதாரி புருஷோத்தமன், இவர் போட்டி தேர்வு மூலம் தேர்வு பெற்று தபால்துறையில் பணியாற்றிவந்தார். தொடர்ந்து  டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி  கிராம நிர்வாக அலுவலர் வேலையில் தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூரில் கிராம நிர்வாக அலுவலகராகப் பணியாற்றிவருகிறார்.

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

இந்நிலையில் இவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து, திருவையாற்றை சேர்ந்த புவனேஸ்வரி என்ற எம்.காம் பட்டதாரியை திருமணம் பேசி முடித்தார். அதனையடுத்து தனது நண்பர்களுடன் கலந்துபேசிய புருஷோத்தமன் சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகவும், அனைத்து மதத்தினரும் உறவினர்களே, ஹிஜாப் என்ற பிரச்னையால் எந்த மதங்களுக்குள்ளும் பிரிவினை வரக்கூடாது என்றும், மதத்தால் பிரிந்திருந்தாலும் பழக்கத்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்பதை புதிய முறையில் தமது திருமணம் மூலம் செய்துகாட்டுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி,  மும்மத முறைப்படியும் தனது திருமணம் நடைபெறவேண்டும் என்று முடிவெடுத்து, அதனை பெண்வீட்டாருக்குத் தெரிவித்தனர், இதைக் கேள்விப்பட்ட பெண் வீட்டாரும் நல்ல முயற்சி என்று வரவேற்று இதற்கு சம்மதம் தெரிவித்தனர். 

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

பின்னர் நண்பர்கள் உதவியுடன் மும்மத முறைப்படியான திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  மயிலாடுறையில் உள்ள திருமணமண்டபத்தில் 27 காலை இந்து முறைப்படி திருமணமும், 26 ஆம் தேதி இரவு இஸ்லாமிய முறைப்படியும், கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது என்று பத்திரிகை அடித்து அழைப்பு விடுத்தார். 

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

அதனை தொடர்ந்து குறித்த தேதியில் 26 இரவு  மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படியான ஆடைகளை அணிந்துவந்து மேடைடியல் அமர்ந்த இளஞ்ஜோடிகளான புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மௌலானா இஸ்லாமிய முறைப்படி திருமண நோக்கம் மற்றம் கணவன் மனைவி கடமைகள் பற்றியும் எடுத்துக்கூறி ஆசீர்வதித்து திருமணத்தை நடத்திவைத்தார்.  அதன் பிறகு கிறித்தவ முறைப்படி ஆடை அலங்காரங்களை செய்துகொண்டு மணமேடையில் அமர்ந்த  புருஷோத்தமன் புவனேஸ்வரி தம்பதியினருக்கு மங்கைநல்லூர் கிறித்துவ போதகர் தலைமையில் கிறித்துவ முறைப்படி அறிவுரைகள் வழங்கப்பட்டு இளஞ்ஜோடிகள் தங்களது கைகளில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டனர்.  

மதமல்ல.. மனிதம்தான் பெருசு.. மணமக்கள் இருவர்தான்.. ஆனால் மூன்று திருமணம்.. மயிலாடுதுறையில் சுவாரஸ்யம்..

தொடர்ந்து நேற்று காலை இந்து முறைப்படியான திருணம் நடைபெற்றது.  இந்த மும்மத திருமணங்களைக் கண்டுகளித்த உறவினர்களும் நண்பர்களும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். தமிழகத்தில் எந்த காலத்திலும் மத மோதல் வராமலிருக்க இது போன்ற திருமணங்கள் மேன்மேலும் அரணாக இருக்கும் என்றும், கிராம நிர்வாக அலுவலரின் இந்த புதிய முயற்சியை உறவினர்கள் மட்டுமின்றி அனைவரும் வெகுவாக பாராட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால்  பரபரப்பு
Breaking News LIVE: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget