தீபாவளியை எவ்வாறு கொண்டாட வேண்டும் - கற்றுக் கொடுத்த தருமபுரம் பள்ளி
மயிலாடுதுறையில் தருமபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் விபத்தில்லா தீபாவளிக்கு வழிவகுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞான சம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்னும் 5 தினங்களில் தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளதையொட்டி மாணவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது என்பதை விளக்கும் விதமாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடப்பட்டது.
இதில் மத்தாப்பு, புஸ்வானம், பட்டாசு, சங்கு சக்கரம் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது. எரிந்து முடித்த மத்தாப்பினை தண்ணீரில் நனைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமாக செய்து காட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு மத்தாப்பு, புஸ்வானம் ஆகியவற்றை கொளுத்தி உற்சாகமாக தீபாவளி பண்டிகையை முன்னதாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Vegetables Price List: செஞ்சுரி அடித்த சின்ன வெங்காயம்.. பட்டாணி.. இன்றைய காய்கறி நிலவரம் இதோ..
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விபத்தில தீபாவளி என அரசு சார்பில் தீயணைப்பு துறையினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினாலும் அங்கு பட்டாசுகளை அதிக அளவில் கையாக குழந்தைகளை காண முடியவில்லை. பட்டாசுகளை வெடித்து மகிழும் குழந்தைகளுக்கு பட்டாசு குறித்த விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்தினால் மட்டுமே விபத்தில்லா தீபாவளியை கொண்டாட முடியும் என்பதை உணர்ந்த இந்த பள்ளி நிர்வாகம் தீபாவளி நேரங்களில் பட்டாசுகளை எவ்வாறு கையாள வேண்டுமென பள்ளி மாணவ, மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் மூலம் போதித்த இந்த செயல் மிகவும் பாராட்டிற்கு உரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை அருகே மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் தலைமையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் இந்தி திணிப்பதை கண்டித்தும், அடிப்படை வசதி இல்லாத குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பணியிடை நீக்கம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்களை மிரட்டி அவதூறாக பேசிய குத்தாலம் அரசு கல்லூரி முதல்வரை பணி நீக்கம் செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,95,000 கன அடியில் இருந்து 1,75,000 கன அடியாக குறைவு..