மேலும் அறிய

பூமிக்கு அடியில் கிடைத்த சாமி சிலைகளை கேட்கும் அதிகாரிகள்; தர மறுக்கும் ஆதீனம் - சீர்காழியில் பரபரப்பு!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மேலும் சிலைகள் உள்ளனவா என தொல்லியல் துறை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

பூமிக்கு அடியில் கிடைத்த சாமி சிலைகளை கேட்கும் அதிகாரிகள்; தர மறுக்கும் ஆதீனம் - சீர்காழியில் பரபரப்பு!

சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்காக  சட்டைநாதர் கோயிலை புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கும்பாபிஷேக விழா வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22 -ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும், 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. 

பூமிக்கு அடியில் கிடைத்த சாமி சிலைகளை கேட்கும் அதிகாரிகள்; தர மறுக்கும் ஆதீனம் - சீர்காழியில் பரபரப்பு!

இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 2 அடி முதல் அரை அடி வரை உள்ள 22 ஐம்பொன் சிலைகளும், மேலும் 100க்கும் மேற்ப்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியர் சுவாமிகள் நேரில் பார்வையிட்டு அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் என கேட்டறிந்தார். மேலும் இந்து சமய அறநிலையத் துறையினர், வருவாய் துறையினரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூமிக்கு அடியில் கிடைத்த சாமி சிலைகளை கேட்கும் அதிகாரிகள்; தர மறுக்கும் ஆதீனம் - சீர்காழியில் பரபரப்பு!

இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என்றும் முதற்கட்டமாக இது 13 -ம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டுள்ளது. அவர்களின் ஆய்வுக்கு பிறகே முழ விவரம் தெரியவரும். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி சிலை கிடைத்த பகுதிக்கு நேரில் சென்று சிலைகளை நேரில் ஆய்வு செய்தார், தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக நாணச்சம்மந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து சிலை குறித்து பேசினார்.

பூமிக்கு அடியில் கிடைத்த சாமி சிலைகளை கேட்கும் அதிகாரிகள்; தர மறுக்கும் ஆதீனம் - சீர்காழியில் பரபரப்பு!

அப்போது சிலைகள் யாருடையது? சட்டை நாதர் கோயிலுக்கு சொந்தமானதா? மன்னர்களுடையதா? மேலும் சிலைகள் பூமிக்கு அடியில் உள்ளதா என தொல்லியல் துறை ஆய்வு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக்கு சிலைகள் உட்படுத்த வேண்டும் என்றும், அரசு சட்டதிட்டத்தின் படி மண்ணிற்கு அடியில் கிடைக்கும் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது என்றும், ஆகையால் சிலை குறித்து விவரங்களை மேற்கொள்ள, சிலைகளை கருவூலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என ஆதீனத்திடம் தெரிவித்தார். இதனைக் கேட்ட தருமபுரம் ஆதீனம் சிலைகள் அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் இரண்டு அடி ஆழத்தில்யே கிடைத்துள்ளது ஆகையால் இது தங்களுக்கு சொந்தமானது என்றும்,

பூமிக்கு அடியில் கிடைத்த சாமி சிலைகளை கேட்கும் அதிகாரிகள்; தர மறுக்கும் ஆதீனம் - சீர்காழியில் பரபரப்பு!

சிலை குறித்த ஆய்வு மற்றும் உண்மை தன்மைகளை அறிய வேண்டும் என்றால் கோயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம் என்றும், ஆகையால் சிலையினை கோயில் வளாகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்ல கூடாதென கூறிவிட்டு சென்றார். இதனை அடுத்து ஆட்சியரும் அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில் அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிலையை அரசு கருவூலத்திற்கு எடுத்து செல்வது தொடர்பாக மேல்மட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Embed widget