மேலும் அறிய
பறை இசையில் அசத்தும் தொழிலதிபர் மகன்; பறையின் மீது தீராத காதல் வந்தது எப்படி..?
பறை இசையில் அசத்தும் தொழிலதிபர் மகன்.நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பறை இசை மீது ஏற்பட்ட தீராத காதல் குறித்த பின்னணி.

பறை இசையில் அசத்தும் சிறுவன்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்திற்குட்பட்ட கீழ்மேல் ஆறாம் தெருவில் வசித்து வருபவர் ரத்தின சபாபதி. இவர் மன்னார்குடியில் பெட்ரோல் பங்கு வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரபா. இவர்களுக்கு லக்க்ஷனா என்கிற 11ஆம் வகுப்பு படிக்கும் மகளும், நான்காம் வகுப்பு படிக்கும் அர்விந்த் சங்கர் என்கிற மகனும் உள்ளனர். அர்விந்த் சங்கர் மன்னார்குடியில் உள்ள தனியார் துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருந்த அர்விந்த் சங்கர் தனக்கு ஆறு வயது இருக்கும் பொழுது தனது தந்தையின் மொபைலில் யூ டியூப் சேனல்களை பார்த்து வந்துள்ளார். அப்போது ஈரோட்டை சேர்ந்த பறை இசை கலைஞரான சவுண்டு மணி என்பவரின் யூடியூப் சேனலை அர்விந்த் சங்கர் ஏதேச்சையாக பார்த்துள்ளார். அதிலிருந்து பறை இசை மீது ஆர்வம் ஏற்பட்டு தேர்வு எழுத பயன்படும் அட்டையில் பறை இசைய அவர் பயின்று வந்துள்ளார். இதை கவனித்த பெற்றோர் இது குறித்து அர்விந்த் சங்கரின் தாய்மாமா தாஸ் ராமசாமிடம் தெரிவித்துள்ளனர்.

தாஸ் ராமசாமி நயன்தாரா நடித்து வெளியான டோரா படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சிறுவன் அர்விந்த் ஷங்கரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தாய் மாமா தாஸ்ராமசாமி தனக்குத் தெரிந்த பறை இசை கலைஞரான ஜெயக்குமார் என்பவரிடம் இருந்து தோல் பறை ஒன்றை வாங்கி அர்விந்த் சங்கருக்கு கொடுத்துள்ளார். இந்த தோல் பறையில் யூடியூப் சேனலை பார்த்து முதல் இரண்டு அடவு வரை இவராகவே பயின்று வாசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பறை இசை மீது சிறுவனுக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து அறிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர், கடந்த மே மாதம் மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்ற கலை இலக்கிய இரவில் மாணவன் அர்விந்த் சங்கரை மேடையேற வைத்துள்ளனர். அந்த மேடையில் முறையான பயிற்சி ஏதுமின்றி சிறப்பாக பறை இசைத்த சிறுவனின் திறமையை பார்ந்து வியந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒருவர் தஞ்சாவூரில் உள்ள விஜயகுமார் என்கிற பறை இசைக் கலைஞரிடம் முறையாக சிறுவனுக்கு பறை இசையை கற்றுக் கொடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் தந்தை அவனை தஞ்சை விஐயக்குமாரிடம் பறை இசை பயிற்சியில் சேர்த்துள்ளார். தற்போது சிறுவன் ஏழு அடவு வரை பயின்று சிறப்பாக பறையை வாசித்து வருகிறான். மேலும் இசையமைப்பாளர் ஆவதே தனது கனவு என்றும் பாரம்பரிய இசைக்கருவியாக பறையை வாசிப்பதில் பெருமை கொள்வதாகும் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து அதை வாசிப்பேன் என்றும் மாணவர் அரவிந்த் சங்கர் கூறுகிறார். தொழிலதிபர் மகனாக செல்வ செழிப்பில் வளர்ந்து தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்த சிறுவன் அர்விந் சங்கர் பறை இசையின் தீராத காதல் கொண்டு பாரம்பரிய இசைக் கருவியை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் பறை இசையில் கலக்கி வரும் அர்விந்த் சங்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















