மேலும் அறிய

தஞ்சையில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

தஞ்சை அருகே, ரயில்வே கேட் பகுதியில் லாரி மோதி உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதையடுத்து ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் வெகுவாக அவதியடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த தடத்தின் வழியாக கும்பகோணத்தில் இருந்து மங்கைநல்லூருக்கு டீசல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த லாரி ரயில்வே கேட்டில் மோதியது.

இதனால் ரெயில்வே லைன் மேலே உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் தீப்பொறி ஏற்பட்டு அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அப்பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக உயா் மின்னழுத்த கம்பிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.

இதனால் சிக்னல் கிடைக்காமல் கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே வந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக கும்பகோணம், மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை- திருச்சி், திருப்பதி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்- மயிலாடுதுறை, திருச்சி - மயிலாடுதுறை ஆகிய பயணிகள் ரெயில்கள் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

தஞ்சையில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

நீண்ட நேரம் ரயில்கள் புறப்படாமல் நின்றதால் பல பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ஆட்டோ, டாக்சி பிடித்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். இதற்கிடையில ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உயர் அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி நள்ளிரவு வரை தொடர்ந்தது. பணி நீண்ட நேரம் நடைபெற்றதால் ரயில்களை இயக்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு டீசல் என்ஜின் வரவழைக்கப்பட்டு அதன் உதவியோடு ஆடுதுறை, குத்தாலம் பகுதியில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை இயக்கும் பணியை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனர்.

தஞ்சையில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

நேற்று அதிகாலையில்தான் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. லாரி மோதி உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் நேற்றுமுன்தினம் இரவு இந்த மார்க்கத்தில் சென்ற அனைத்து ரயில்களும் சுமார் 3 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை ரயில்வே போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாரி மோதிய உடனேயே மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் வேறு எவ்வித விபத்துக்களும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தலைப்பு செய்திகள்

அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget