லால்குடியில் நாளை (5ம் தேதி) இங்கெல்லாம் மின்தடைங்க... உங்க ஏரியா இருக்கா பாருங்க
Lalgudi Power Shutdown 05.02.2025 : நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரைமின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lalgudi Power Shutdown: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை மின்தடை செய்யப்படுகிறது.
அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்கண்ட ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லால்குடி, ஏகே நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், விஓசி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம் பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு, மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் மணிராஜன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

