மேலும் அறிய

Thanjavur District: அறிவிப்பு வருமா? வழக்கம் போல் கானல் நீராகுமா? - மாவட்ட எதிர்பார்ப்பில் கும்பகோணம் மக்கள்

இப்போவா... அப்போவா என்று எதிர்பார்ப்புடன் காலத்தை நகர்த்தி வந்த மக்களுக்கு இந்த குடியரசு தினத்தில் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது பாராளுமன்ற தேர்தலுக்குள் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்: இப்போவா... அப்போவா என்று எதிர்பார்ப்புடன் காலத்தை நகர்த்தி வந்த மக்களுக்கு இந்த குடியரசு தினத்தில் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது பாராளுமன்ற தேர்தலுக்குள் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர். யார் அந்த மக்கள்? என்ன எதிர்பார்ப்பு என்று தெரியுங்களா?

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் ஏராளமான பிரபலமான கோயில்கள் உள்ளன. கும்பகோணத்தை சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், புராதன கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள் உள்ளன.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் இங்குதான் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மீக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 


Thanjavur District: அறிவிப்பு வருமா? வழக்கம் போல் கானல் நீராகுமா? - மாவட்ட எதிர்பார்ப்பில் கும்பகோணம் மக்கள்

இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணத்திற்கு மற்றொரு பெருமை என்றால் அது வெற்றிலைதான். மனசும், நாக்கும் மணக்கும் வெற்றிலை என்றால் அது கும்பகோணம் வெற்றிலைதான் என்பார்கள். கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டுக்கு பெயர் பெற்றது, நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு, பூஜை உலக புகழ் பெற்றது. இவைகளை வாங்குவதற்காகவும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள். இப்படி அனைத்து விதத்திலும் மாவட்டம் ஆக தகுதியிருக்கு? ஆனால் ஆகலையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தனர் கும்பகோணம் மக்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கடந்த  பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். புயல் காற்றில் அடித்துச் செல்லப்படும் காய்ந்த இலை போல் கோரிக்கைகள் கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகின்றன.

மக்களும் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற எண்ணத்தில் கும்பகோணம் பகுதிக்கு வரக்கூடிய அனைத்து அரசியல் முக்கிய பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆகுது கும்பகோணம்... தனி மாவட்டமாக... அறிவிப்பு விரைவில் என்று உலா வரும் செய்திகள் மக்கள் மத்தியில் வைரலாக பரவி கொண்டே இருக்கின்றன.

இது வதந்தியா இல்லை? உண்மை அறிவிப்பா என்று மக்கள் பெரும் குழப்பில் தவித்து வருகின்றனர். அவ்வாறு அது உண்மை தகவலாக இருந்தால் கும்பகோணம் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும். இந்த தகவல்கள் அனைத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிறதே தவிர அரசு சார்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதுதான் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம். தேர்தல்கள் நெருங்கும் காலக்கட்டத்தில் எல்லாம் தஞ்சை மாவட்டம் 2 ஆக பிரித்து கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்பதுதான் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளாக இருக்கிறது. அதுக்கு பிறகு... பிறகுதான்…

இந்த நிலையில்  இந்த ஆண்டில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலாவது கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கும்பகோணம் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் வர்த்தக  மற்றும் வணிகர் சங்கத்தினர் கூறுகையில்,  கும்பகோணத்தை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அலுவலகங்கள் மட்டும் தான் இல்லை. ஆனால் மற்ற  அனைத்து அரசு அலுவலகங்களும் இருக்கின்றன. கும்பகோணத்தில் தான் தமிழக அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் உள்ளது.   

அதே போல் தமிழகத்தில் உள்ள கோவில்களில் முக்கிய கோவில்கள் அனைத்து ராசிகாரர்களுக்கும் உள்ள கோவில்கள் என அனைத்தும் கும்பகோணத்தில் தான் உள்ளன. இவ்வாறு பல சிறப்புகளை கும்பகோணம் கொண்டிருந்தாலும் மாவட்டம் என்ற பெயரை பெற்றதாக இல்லை. ஆட்சிக்கு வரக்கூடிய எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும் அறிவிப்பை வெளியிடுகின்றனர். ஆனால் அதனை நிறைவேற்றுவதில்லை.

மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் கும்பகோணம் பகுதி பொருளாதாரம் மற்றும் கல்வியில் நல்ல வளர்ச்சியை சந்திக்கும். எனவே வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

கும்பகோணத்தை பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை  நடத்தியுள்ளோம். ஒரு மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன. இருந்தாலும் மாவட்டம் மாவட்ட அறிவிப்பு என்பது எங்கள் கனவாக தான் இருக்கிறது. புதிய மாவட்ட அமைப்பு விதிகளின் படி வருவாய் பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் கும்பகோணத்தில் உள்ளது. எனவே நடப்பு பாராளுமன்ற தேர்தலையொட்டி கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும்  என்றனர்.

இதற்கிடையில் எங்கள் ஊராட்சிகளை கும்பகோணம் மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது என்று வலியுறுத்தி பல ஊராட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தஞ்சை கலெக்டரிடம் மனுவும் அளித்த நிகழ்வும் நடந்தது. வருமா அறிவிப்பு... கனவு நனவாகுமா? கானல் நீராகுமா... வழக்கம் போல் காத்திருக்கின்றனர் கும்பகோணம் மக்கள்.

அரசு அதிகாரிகள் விளக்கம்:

தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள்  பிரிக்கப்படுவதாக தகவல் வந்த நிலையில், தற்போது மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், இந்த தகவல் வதந்தி என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget