மேலும் அறிய

கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ)  நவீன் சேவியர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ)  நவீன் சேவியர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை டெல்டாவில் தற்போது குறுவை அறுவடை 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஒரு புறம் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 85 சதவீதம் நெல் அறுவடை நடந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மீதமுள்ள பகுதிகளிலும் அறுவடை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் பணிகளும் நடக்கிறது. நெல் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டும் பிடிக்கப்படுவதால் விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லை சாலைகளில் காயவைத்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

இந்நிலையில் கும்பகோணம், அம்மாபேட்டை, ஆடுதுறை, இரும்புதலை, திருக்கருக்காவூர், பாபநாசம் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் என ஆய்வு மேற்கொண்டனர்.

விதைகளின் முளைப்புத்திறன் குறித்து விதை ஆய்வாளர்கள் மூலம் நெல் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வழங்கினார்.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget