மேலும் அறிய

மாணவர் கையில் மதுக்கோப்பை... இதுதான் திராவிட மாடலா? - சீறும் அன்புமணி இராமதாஸ்!

திருக்குறள் படித்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டிய மாணவர்களை, இத்தகைய நிலைக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது - அன்புமணி

புதுச்சேரி : தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் பள்ளி மாணவர் ஒருவர் மது போதையில் இருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருவதற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில்.,

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலத்தில்  தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் தள்ளாத குடிபோதையில்  அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்தக் காணொலியை காண்பதற்கே மனம் வலிக்கிறது. திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தை படித்து, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டிய  தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களை இப்படி ஒரு நிலைக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக வானத்தை வில்லாய் வளைத்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டன் டன்னாய் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார். ஆனால், மாணவர்களின் நலனுக்காக அவர் எதையும் செய்யவில்லை.  மாறாக அவர்களுக்குத் தேவையான தரமான கல்வியை வழங்காமல், தேவையற்ற மதுவைத் திணித்து அவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்தது தான் திமுக அரசின் சாதனையாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் தரமான கல்விக் கட்டமைப்புகள் இல்லை. அரசு பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. 5 வகுப்புகள் கொண்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியர் அல்லது இரு ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். ஆனால்,  பத்துக்கு பத்து மட்டுமே இட வசதி கொண்ட டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகரிப்பதற்காக 3 முதல் 5 பணியாளர்களை திமுக அரசு நியமித்திருக்கிறது. இதுவா மாணவர் நலன் காக்கும் அரசு?

ஒரு மாணவன் அவனது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்குள் குறைந்தது இரு மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. எந்த ஒரு பொருளும் எளிதாக கிடைப்பது தான்  அதற்கு மக்கள் அடிமையாவதற்கு காரணம் என்று உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் கூறுகின்றன. அந்த வகையில் கைக்கெட்டும்  தொலைவில் மது தாராளமாக கிடைக்கும் போது அதற்கு மாணவர்கள் அடிமையாவது வழக்கம். மதுவை  தெருக்கள் தோறும் வெள்ளமாக ஓடவிட்ட  திமுக அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தனியார் பள்ளி மாணவர் நேரடியாக மதுக்கடையில் மது வாங்க வில்லை என்றும், கல்லூரி மாணவர் ஒருவர் தான் மதுவை வாங்கி பள்ளி மாணவருக்கு கொடுத்து குடிக்க வைத்ததாகவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் திமுக அரசு, அதற்காக கல்லூரி மாணவரை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்ட மாணவருக்கு இன்னும் 21 வயது ஆகவில்லை. தமிழ்நாடு அரசு வகுத்துள்ள விதிகளின்படி 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது; அனைத்து மதுக்கடைகளிலும் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்ற வாசகம் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் திமுக அரசு செய்ததா?  அவ்வாறு செய்திருந்தால் கல்லூரி மாணவருக்கு மது கிடைத்தது எப்படி? கல்லூரி மாணவருக்கு மது வணிகம் செய்த பணியாளர் முதல்  அதை உறுதிப்படுத்தத் தவறிய முதலமைச்சர் வரை அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதை முதலமைச்சர் செய்வாரா? இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா?

திமுகவின் தேர்தல் அறிக்கையை சூப்பர் ஸ்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.  ஆனால், அதில் மதுவிலக்கு குறித்தோ, போதைப் பொருள் ஒழிப்பு குறித்தோ ஒரே ஒரு வார்த்தைக் கூட கூறப்படவில்லை.  அப்படியானால், மாணவர்களை மதுவுக்கும்,  போதைக்கும் அடிமையாக்குவது தான் சூப்பர் ஸ்டாரின் வேலையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனை அரிதாரங்களை பூசி வந்தாலும் நாட்டைக் கெடுத்த அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கவிருக்கும் பரிசு படுதோல்வி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget