நம்பிக்கையை விடாத மாற்றுத்திறனாளி... மாரத்தான் போட்டியில் 426 ஆவது முறையாக பங்கேற்று அசத்தல்!
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா, நூற்றாண்டு விழாவாக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று கலைஞர் பிறந்தநாள் இருந்தநிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் தமிழகத்தில் எளிய முறையில் கொண்டாடும் படி அறிவுருத்திருந்தார். அதனை தொடர்ந்து நேற்று பல்வேறு இடங்களில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டாலும், தொடர்ந்து வரும் நாட்களில் திமுகவினர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை விமர்சையாக கொண்டாட உள்ளனர்.
அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதியில் திமுக மாவட்ட சிறுபான்மை அணி சார்பாக கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. பத்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்ட பந்தயத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான நிவேதா.முருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக 10 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் சிறுவர்கள் முதல் 68 வயது முதியவர் வரை பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். ஆறுபாதியில் துவங்கிய மாரத்தான் போட்டி மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் மைதானத்தில் ஓட்டம் முடிவடைந்தது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், தஞ்சாவூர் மேயர் சன் ராமநாதன் ஆகியோர் ரொக்க பரிசும், சான்றிதழ்களும் கேடயங்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதில் ஹரியானாவைச் சேர்ந்த அணில் குமார் முதலிடத்தையும், தஞ்சாவூர் பிரகதீஸ்வரன் இரண்டாம் இடத்தையும், கென்யா மாணவர் ஜேம்ஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை கீதாஞ்சலி, கோயம்புத்தூர் சௌமியா மற்றும் அனுப்பிரியா முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அப்துல்லாஷா மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Ben Stokes Record: வேற வெலல்..! கேப்டனாக இப்படியும் ஒரு சாதனையா..? ஆடாமல் ஜெயித்த பென் ஸ்டோக்ஸ்..!
விளையாட்டுப் போட்டி ஆர்வத்தை தூண்டும் வகையில் பெரம்பலூர் மாவட்டம் மேலபுலியூர் பகுதியை சேர்ந்த 40 வயதான கண்ணதாசன் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் 426 ஆவது முறையாகவும், மதுரை மாவட்டம் பனங்கநத்ததை சேர்ந்த 68 வயது முதியவர் 32 -வது முறையாக மரத்தான் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற