மேலும் அறிய
Advertisement
Kalaignar Kottam: பொதுமக்கள் பார்வைக்கு வந்த கலைஞர் கோட்டம் - திறக்கும் நேரம், கட்டணம் விவரம் இதோ
பொதுமக்கள் பார்வைக்கு வந்த கலைஞர் கோட்டம். சட்டமன்ற உறுப்பினருடன் கைகுலுக்கி மகிழ்ந்த துவக்கப் பள்ளி மாணவ மாணவிகள்.
திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் 7000 சதுர அடி பரப்பளவில் 12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்வு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று பிரமாண்டமாக இங்கு நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த கலைஞர் கோட்டத்தை பொதுமக்கள் பார்வையிட இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காலை முதல் ஏராளமானோர் கலைஞர் கோட்டத்தை வந்து பார்த்துவிட்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கலைஞர் கோட்டத்தை பார்வையிடுவதற்காக வரிசையாக வந்தனர். அப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனை பார்த்த மாணவ, மாணவிகள் குழுவாக நின்று அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும், மாணவ-மாணவிகள் அவருடன் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் அமர்ந்த நிலையில் உள்ள முழு உருவ பலிங்குச் சிலையை பார்த்து இது யார் என்று அவர் கேட்டவுடன் மாணவிகள் சிறிதும் தாமதிக்காமல் இது கலைஞர் தாத்தா என்று ஒருமித்த குரலில் கூறினர். இந்த கலைஞர் கோட்டத்தை பார்வையிடுவதற்கு நுழைவு கட்டணமாக இருபது ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
கலைஞருடன் செல்பி எடுக்கும் முனையம், பாளையங்கோட்டை சிறையில் கலைஞர் இருந்த காட்சி வடிவமைப்பு, கலைஞரின் அரசியல் வாழ்வு குறித்த அரிய புகைப்படங்கள், கலைஞர் தனது தாய் அஞ்சுகம் அம்மைமையாருடன் இருப்பது போன்ற சிலை வடிவமைப்பு கலைஞர் மாணவ நேசன் கையெழுத்து பிரதியுடன் நிற்பது போன்ற சிலை, தேர் வடிவமைப்பில் கலைஞரின் சிலை, கலைஞர் அருங்காட்சியகம் முத்துவேலர் நூலகம், சிறிய திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கலைஞர் கோட்டத்தில் உள்ளன.
இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்த கலைஞர் கோட்டம் காலை 9 மணி முதல் ஒரு மணி வரையிலும் மதியம் மூன்று மணியிலிருந்து ஏழு மணி வரையும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு செயல்பட்டவர் கலைஞர். நாடகம் முதல் ஊடகம் வரை அவரது படைப்புகள் தொடர்ந்தன. பேருந்து முதல் மெட்ரோ ரயில்வரை அவரது திட்டங்கள் தொடர்ந்தன. உழவர் சந்தையும் தந்தார். டைடல் பார்க்கும் தந்தார். அவரது கோட்டத்திலும் நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செல்ஃபி பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நாற்காலிகள் காலியாக இருக்கும். ஒரு நாற்காலியில் நாம் உட்கார்ந்து, பக்கத்தில் உள்ள நாற்காலியைப் பார்த்து வணங்கலாம், புன்னகைக்கலாம். அந்த நொடியில் எடுக்கப்படும் ஃபோட்டோ, சில நொடிகளில் பிரிண்ட் போடப்பட்டு நம் கைக்கு வரும்போது, நமக்கு பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருப்பார்.
கலைஞரை நேரில் பார்க்க வாய்ப்பில்லாத தலைமுறையினர், இந்தக் கோட்டத்திற்கு வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை, சளைக்காத போராட்டத்தை, தொலைநோக்குத் திட்டங்களை, நிகரற்ற படைப்பாற்றலைத் தெரிந்து கொள்ளும்போது, இப்படிப்பட்ட அற்புதத் தலைவரைப் பார்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வாய்ப்பு இது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion