கும்பகோணம் அருகே கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் மரணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கபாடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பாரதியார் நகரில் அப்பகுதி இளைஞர்கள் சார்பில் கபாடி போட்டி நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்ற கபாடி வீரர் பங்கேற்றார். இவருக்கு கபாடி விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென மாரடப்பு ஏற்பட்டது.
இதை அறிந்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன்றி செந்தில் குமார் உயிரிழந்தார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் காடாம்புலீயூர் அடுத்த புரங்கணி கிராமத்தை சேர்நதவர் கபடி வீரர் விமல் பண்ருட்டி அருகே மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும் போது களத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல் ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) என்பவர் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவர் இறந்தார். தற்போது கும்பகோணம் பகுதியில் கபடி வீரர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.