கட்டி முடிச்சு 2 ஆண்டு ஆச்சுங்க... முழுமையாக முடிக்க நிதி வரலையாம்
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பணிகள் தொடங்கி தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏறத்தாழ கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் கலைஞர் காலனி தெருவில் கட்டப்பட்டு முடிவு பெறாமல் இருக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடன் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் கலைஞர் காலனி தெருவில் 60க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்gதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பணிகள் தொடங்கி தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏறத்தாழ கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் பணிகள் உள்ளன. ஆனால் நிதி இல்லை நிதி வந்தவுடன் முழுமையாக பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி முழுமை பெறாமல் உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
மேலும் இப்பவே சேர்ந்த மக்கள் குடிநீர்க்காக பல இடங்களுக்கு அலையும் நிலை உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை முழுமையாக முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எப்படி சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், பல வைரக்கணக்கில் செலவு செய்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இன்னும் சில பணிகள் உள்ளன. இதற்கு போதிய நிதி இல்லை என காரணம் கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் அப்படியே விட்டுள்ளனர்.
பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி செயல்பாட்டிற்கு வராததால் கலைஞர் காலனியில் உள்ள மக்கள் குடிநீக்காக அவதிப்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீதி பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தெரிவித்தனர்.





















