மேலும் அறிய

விவசாயிகளை அரசு அதிகாரிகள் மதிக்காதது வருத்தமளிக்கிறது -  அய்யாக்கண்ணு

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 11 -ஆம் தேதி பெய்த அதீத கனமழையின் காரணமாக சுமார் 90,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், பல்வேறு இடங்களில் வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் இடிந்து சேதம் அடைந்தன. இதையடுத்து மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க பல்வேறு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

விவசாயிகளை அரசு அதிகாரிகள் மதிக்காதது வருத்தமளிக்கிறது -  அய்யாக்கண்ணு

இந்நிலையில், மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும், மழையால் பாதித்த விவசாயிகள் மற்றும் அனைத்து கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு 5,000 ரூபாய் வழங்கிட வேண்டும் மற்றும் தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் விஜயா திரையரங்கம் பகுதியில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் பேரணியாக புறப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். 

விவசாயிகளை அரசு அதிகாரிகள் மதிக்காதது வருத்தமளிக்கிறது -  அய்யாக்கண்ணு
விவசாயிகளை அரசு அதிகாரிகள் மதிக்காதது வருத்தமளிக்கிறது -  அய்யாக்கண்ணு

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட விவசாயிகளை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் உள்ளே நுழையவிடாமல் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் விவசாயிகள்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் மனுவை அளித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

விவசாயிகளை அரசு அதிகாரிகள் மதிக்காதது வருத்தமளிக்கிறது -  அய்யாக்கண்ணு

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய  அய்யாக்கண்ணு  கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரேநாளில் பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். மழைபாதிப்பு குறித்து முறையீடுவதற்கு வந்தால் அதிகாரிகள் விவசாயிகளை மதிக்காது அலட்சியப்படுத்துவது வேதனை அளிக்கிறது, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்க வந்தால் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் தலைமையிலான கூட்டத்திற்காக தஞ்சாவூர் சென்றுவிட்டதாக கூறுகின்றனர். அமைச்சரிடம் பேசினால் ஆட்சியர் உங்களை சந்தித்துவிட்டு கூட்டத்திற்கு வருவார் என்கின்றனர். ஆனால் அதிகாரிகள் விவசாயிகளை அலட்சியப்படுத்துவது வேதனை அளிக்கிறது. தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் வங்கியில் கடனை வாங்கி வைத்துள்ளனர்.

விவசாயிகளை அரசு அதிகாரிகள் மதிக்காதது வருத்தமளிக்கிறது -  அய்யாக்கண்ணு

விவசாயிகள் வெட்டி அனுப்பும் கரும்புக்கு உரிய விலை தராமல் ஏமாற்றி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர். மூடப்பட்டுள்ள தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு நிதிஒதுக்கீடு செய்து உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர்கள் சாமி.மனோகரன், மகேந்திரன், மாவட்ட தலைவர் அ.ராமலிங்கம், துணைத் தலைவர் டி.ஆர்.முருகேசன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், வீரசோழன் விவசாயிகள் சங்க தலைவர் வாணிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: Will Smith on Oscar Incident: ' அது பலநாள் அடைத்து வைத்திருந்த கோபம்..' க்ரிஸ் ராக்கை அறைந்தது குறித்து பேசிய வில் ஸ்மித்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Embed widget