மேலும் அறிய

சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின் ? - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

''சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கூடுதலாக சென்னை மேயர் பொறுப்பும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார்; அமைச்சர் பதவி வழங்கினாலும் சிறப்பாக செயல்படுவார்''

திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வருகை தந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தின் உட்கட்டமைப்பு சிறப்பாக இருந்தாலும், சில குறைபாடுகள் உள்ளது. இந்த நிலையில் அரசு தேர்வுகளுக்கு இந்த நூலகத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. அதனை கருத்தில் கொண்டும் இந்த மாவட்ட மைய நூலகத்தை புனரமைக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்தும் பள்ளிக்கல்வித்துறை நிதியிலிருந்தும் மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைந்து புனரமைப்பு பணிகள் நடைபெறும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதற்காக தொடர்ந்து சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே டெல்லி சென்று பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார். அதன் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின் ? - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி புகார் தெரிவிக்கக் கூடிய எண்ணை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் பள்ளி வளாகத்திற்குள் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 14417 என்ற புகார் என்னையும் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் அறியும்படி வெளிப்படையாக விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வெளிப்படையாக தாங்கள் முன் வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது வீடியோ பதிவு மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 412 வட்டங்களுக்கு வட்டத்திற்கு இரண்டு மருத்துவர்கள் என மாணவர்களை கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டும் மாணவர்களின் மன ரீதியான பிரச்சினைகளை ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் முன்திருத்த தேர்வுகள் நடத்தப்பட்டு கட்டாயமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. பள்ளிகள் இருக்கக்கூடிய இடத்தை, தூர அளவை பொறுத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் திருவாரூர் நகர பகுதியில் கூடுதலாக அரசு பள்ளி தேவைப்பட்டால் அமைத்து தரப்படும். தற்போதுவரை ஒமைக்கிறான் வைரஸின் வீரியம் குறைவாக இருப்பதால் ஜனவரி 3ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை சுழற்சி முறை வகுப்பு இல்லாமல் தினசரி வகுப்புகள் நடைபெறும் என நடந்து முடிந்த ஊரடங்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஒருவருக்கு  ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் கேட்டபோது வருகின்ற 25 ஆம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின் ? - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு எந்தெந்த இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பது தெரியவரும். அதற்கேற்ப ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக பழிவாங்கும் நிகழ்வு நடைபெறுவதாக எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளித்தவர்.. துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ஒரு முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அதுமட்டுமின்றி சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசும்போது கூட இது எனது ஆட்சி அல்ல நமது காட்சி என தெரிவித்துள்ளார். இதில் பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கூடுதலாக அந்த பொறுப்பும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார். அமைச்சர் பதவி வழங்கினாலும் சிறப்பாக செயல்படுவார் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்
Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!
IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!
Embed widget