மேலும் அறிய

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு செய்ய வேண்டிய சிறப்பு எது? - உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கூறியது என்ன?

இது போன்ற இறைவனுக்கு மிகப்பிரமாண்டமான கோயில்களை அமைத்தவர்கள்தான் தமிழ் மன்னர்கள், அதைத் தாண்டி தன்னுடைய காதலிக்கு கட்டிடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல.

தஞ்சாவூர்: தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு, ராஜராஜன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் பெருமன்னன் ராஜராஜனுக்கு செய்கிற சிறப்பாக இருக்கும் என்று சதய விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது ஆண்டு சதய விழா கடந்த வாரம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் தொடங்கியது. சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது:

ராஜராஜ சோழனை மட்டும் பெருமன்னன் என ஏன் அழைக்கிறோம்

தமிழ் மண்ணில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜசோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம். முற்கால சோழர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட போர் முறையால் ஆட்சியை களப்பிரர்களிடம் இழந்த சோழர்கள் மீண்டும் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் அரியணை ஏறினர். இதையடுத்து சோழ மன்னர்களின் ஒருவரான விஜயாலய சோழனின் நிர்வாகத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ராஜராஜசோழன், முன்னோர்களை காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வந்தார். 

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு செய்ய வேண்டிய சிறப்பு எது? - உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கூறியது என்ன?

உணவு உற்பத்தியை தொடக்கிய ராஜராஜ சோழன்

தஞ்சாவூரைச் சுற்றிலும் மக்கள் வாழ முக்கியமான தேவையான உணவு உற்பத்தியை தொடங்கினர். ராஜராஜசோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன்னுடைய நாட்டில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும், அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே குமரியில் தொடங்கி, வடக்கே துங்கபத்திரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார் ராஜராஜசோழன்.

தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்திய பின்னர் ராஜராஜசோழன் சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினான். பல்லவர்கள் காஞ்சியில் கட்டிய சில கோயில்களை பார்த்துவிட்டு, அதை விட சிறந்த கோயிலை கட்ட வேண்டும் என  1006 -ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010 முடித்தது தான் இந்த தஞ்சாவூர் பெரிய கோயில். பின்னர் 1010-ம் ஆண்டு இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தமிழ் மண்ணில் எடுபடாது

இந்த தெய்வ பூமியிலேயே தெய்வ வழிபாட்டுக்கு மாற்றாக, இறை உணர்வுக்கு மாற்றாக, எவர் ஒருவர் பேசினாலும், எவர் ஒருவர் சித்தாந்தம் பேசினாலும், அதற்கான கோட்பாடுகளை கொண்டு வந்தாலும், இந்த தமிழ் மண்ணில் எடுபடாது என்பதற்கு இந்த மக்கள் தான் சாட்சி. திருவள்ளுவருடைய வழியை உள்வாங்கி கொண்ட ராஜராஜசோழன், பசியும், நோயும், பகையும் இல்லாத நாடாக உருவாக்கினார்.  ராஜராஜசோழன், வள்ளுவன் வழியில் இறை நம்பிக்கையோடு ஆட்சி புரிந்தார்.

ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து கம்பீரமாக நிற்கிறது

இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து கம்பீரமாக நிற்கிறது என்றால், ராஜராஜசோழன் மட்டுமல்லாமல், இந்த கோயில் உள்ளே வீற்றிருக்கும் பெருவுடையாரின் சக்தி தான் காரணம். இது போன்ற இறைவனுக்கு மிகப்பிரமாண்டமான கோயில்களை அமைத்தவர்கள் தான் தமிழ் மன்னர்கள், அதைத் தாண்டி தன்னுடைய காதலிக்கு கட்டிடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல, அப்படிபட்ட மன்னர்கள் தமிழ் மண்ணிலே இல்லை.

தமிழ்ப்பல்கலைக்கு ராஜராஜ சோழன் பெயர்

ராஜராஜசோழனின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அப்படிபட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனுக்கு தமிழக அரசு இன்று அரசு விழாவாக நடத்துகிறது மாத்திரமல்ல, இன்னொன்றையும் நான் சொல்கிறேன், இந்த தஞ்சை மண்ணிலே இருக்க கூடிய தமிழுக்கு தொன்றாட்டக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு, ராஜராஜன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்ட வேண்டும், அவ்வாறு செய்தால் பெருமன்னன் ராஜராஜனுக்கு செய்கிற சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறுமி அஸ்மிதா ராஜாவின் யாழ் இசை

தொடர்ந்து கருத்தரங்கம், திருவையாறு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரம் நிகழ்ச்சி, ஸ்ரீமுத்ரா நாட்டிய கலாலயம் பரதநாட்டியம், மதியம் 3.30 மணிக்கு சிறுமி அஸ்மிதாராஜாவின் யாழ் இசை நிகழ்ச்சி நடந்தது. சிறுமியின் அற்புதமான யாழ் இசை வாசித்தல் திறமையை அனைவரும் பாராட்டினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Embed widget