தஞ்சையில் 2ம் நாளாக கனமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தஞ்சை நகரம், பாபநாசம், அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சையில் இன்று அதிகாலை முதல் 2ம் நாளாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. காலை முதல் மாலை வரை மழை விட்டுவிட்டு பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன் தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை தாலுகா அதம்பை பகுதியில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூரில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கன மழையாக மாறியது.
பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று முதல் வரும் 16ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறு போல் தேங்கி நின்றது. தஞ்சை நகரம், பாபநாசம், அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தஞ்சை நகரத்தின் சில தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை தாலுக்கா அதம்பை பகுதியில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேோல் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: நீலகிரியில் 30.40, மருங்குளத்தில் 37.20, மாத்தூரில் 26 வல்லத்தில் 33.20, கண்டியூரில் 29.60, நடுக்காவேரியில் 44.80, வீரரசன்பேட்டையில் 34.40, அகரப்பேட்டையில் 27.60, திருமங்கல கோட்டையில் 33.60, பலன் புதூரில் 36.80, ஈச்சங்கோட்டையில் 30.80, பாச்சூரில் 33.60, பினையூரில் 26.40, பெருமண்டியில் 18, நாச்சியார் கோவில் 33.60.
கபிஸ்தலத்தில் 33.60, சாலியமங்கலத்தில் 33.60, மெலட்டூரில் 22.80, வேப்பத்தூரில் 28.40, முல்லுக்குடியில் 34.80, உக்கடையில் 40.40, அதிராம்பட்டினத்தில் 33.20, துவரங்குறிச்சியில் 42, கீழக்குறிச்சியில் 34.40, நாட்டானிக் கோட்டையில் 20.80, பெருமகளூரில் 33.20. இவ்வாறு மழையளவு பதிவாகியுள்ளது.
இத்தகவலை தஞ்சை பேரிடர் மேலாண்மை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

