மேலும் அறிய

தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம சுகாதார செவிலியர்கள் 5 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நடந்த  ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீதாலெட்சுமி, பொருளாளர் திருமாமகள் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தடுப்பூசி நாளன்று தடுப்பூசி பணியுடன் யு-வின் ஆப் சென்ற புதிய செயலி மூலம் டேட்டா என்ட்ரி பணியையும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தும் அரசின் அரசாணையை திரும்ப பெற வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்  ஒரு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டரை நியமிக்க வேண்டும். இதனால் சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.

முற்றிலும் பழுதடைந்த தங்குவதற்கு தகுதியில்லா துணை சுகாதார மைய கட்டிடங்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் 5 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும். அலுவலக நேரம் தவிர்த்து இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து, பணிக்கு சம்மந்தமில்லாத வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தேமுதிக ஆர்ப்பாட்டம்: அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்கக்கோரி தஞ்சையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தே.மு.க.தி.க. சார்பில் தஞ்சை ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமநாதன் (தஞ்சை மாநகர்), பழனிவேல் (தஞ்சை தெற்கு), சங்கர் (கும்பகோணம் மாநகர்), சுகுமார் (தஞ்சை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர் முகமதுஅலி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் பூபேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. அளித்த வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கவேண்டும். காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 
 

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget