Guru Peyarchi 2022: குரு அனுகிரஹ ஸ்தலமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
Guru Peyarchi 2022: தருமபுரம் குரு அநூகிரஹஸ்தலமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் முன்னிட்டு ஶ்ரீமேதா தெட்சினாமூர்த்தி தங்ககவச அலங்காரத்தில் காட்சியளித்தார்
நவகிரஹங்கள் இடப்பெயர்ச்சியில், சனி, குரு, ராகு, கேது ஆகிய நான்கு ஆகிய நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி ஜோதிட சாஸ்திரத்தின் சிறப்பாக எழுதக் கூடிய ஒன்றாகும். இந்த நான்கு கிரகப்பெயர்ச்சியை கொண்டோ ஜோதிடத்தில் நன்மை, தீமை, எதிர்கால் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கணிக்கின்றனர். அதிலும் சனி, ராகு, கேது பெயர்ச்சிகளை தவிர்த்து குரு பெயர்ச்சி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. குரு பெயர்ச்சி (Guru Peyarchi) பொறுத்தவரை பெரும் நன்மைகளை வழங்கக்கூடிய பெயர்ச்சி என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுவதால் குரு பெயர்ச்சியை முக்கிய நிகழ்வாக இந்துக்கள் கருதுகின்றனர்.
நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் குரு பெயர்ச்சி நிகழ்வை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வழிபடுவார்கள். அந்த வகையில் இன்று அதிகாலை குருபகவான் கும்ப ராசியிலிருந்து கும்ப மீன ராசிக்கு சரியாக 4.16க்கு இடம் பெயர்ந்தார்.
தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை சிவாலயங்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடைய முடியும் என்பது ஐதீகம். இந்நிலையில் இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள அநூக்கிரகஸ்தலமான மேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது.
பஞ்சமுக அர்ச்சனை மகா தீபாராதனை பஞ்சமுக தீபாரதனை செய்யப்பட்டது. தருமபுரம் ஆதினம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவில் தருமபுரம் ஆதீனத்திற்கு பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் இந்த குரு பெயர்ச்சியால் நம்மை அடையும் ராசிக்காரர்கள் சிறப்பு வழிப்பாட்டிலும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டுமோ அவர்கள் எல்லாம் பரிகாரம் பூஜைகளிலும் ஈடுபட்டனர்.