மேலும் அறிய
நாகை: கோடியக்காடு கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு - போலந்தை சேர்ந்தவர் கைது
கோடியக்காடு கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லாத மர்ம படகு. இலங்கையிலிருந்து மிதக்கும் படகு மூலம் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா கைது செய்து தீவிர விசாரணை.

போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடற்கரையில் காற்று நிரப்பி நீரில் செல்லும் 14 அடி நீளம் உள்ள படகு ஆளில்லாமல் கரை ஒதுங்கியுள்ளது. அந்தப் படகில் இரண்டு உயிர் கவச உடை, காற்றடிக்கும் பம்ப் ஒன்று, 16 தண்ணீர் பாட்டில் ஆகியவை இருந்தன. இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், கடலோரக் காவல்படையினர், கடற்படையினர், வனச்சரகர் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகப்பட்டினத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து காட்டுப் பகுதி வரை சென்றது. இந்த ஆள் இல்லாத படகில் வந்தவர்கள் பயங்கரவாதிகளா? கடத்தல்காரர்களா? அல்லது அகதிகளா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், ட்ரோன்கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தினார். இந்த நிலையில் கோடியக்காடு கடற்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மிதவை படகில் வந்தது போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா என்ற 39 வயதான நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடடிஸ்டா என்பவர் சென்னை செல்ல வழி கேட்டு சந்தேகத்து இடமான வகையில் சுற்றித்திரிந்தார். அந்த நபரை ஆற்காட்டு துறை கிராம மக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை நீதிமன்றம் அடிதடி வழக்கில் கைது செய்து அவரை சிறையில் அடைத்து பாஸ்போர்ட்டை முடக்கியது. இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்த நபர் காற்று அடித்த ரப்பர் படகின் மூலம் இந்திய கடல் எல்லை வழியாக கோடிக்காடு வந்ததும் அங்கிருந்து டெல்லி சென்று தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றுக் கொண்டு அவர் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு கோடிக்காடு படகுமூலம் வந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் கடலோர காவல்துறையினர், உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement