மேலும் அறிய

மத்திய அரசு நிறுவனத்தில் அருமையான தொழிற்பயிற்சி வாய்ப்புங்க!!!

ரயில்வே துறையில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா? மத்திய அரசு ரைட்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர்: மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. இதை மிஸ் பண்ணிடாதீங்க. ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பட்டதாரி, டிப்ளமோ மற்றும் தொழிற்பிரிவு இடங்களுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். செம சூப்பர் வாய்ப்புங்க.

ரயில்வே துறையில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா? மத்திய அரசு ரைட்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பு மட்டுமின்றி, பொறியியல் அல்லாத டிகிரி படிப்புகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி 1961 கீழ் 1 வருட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 2025-26 ஆண்டில் மொத்தம் 252 இடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் ரைட்ஸ் (RITES) ஆகும். பல்துறை பொறியியல் வேலைகள் மட்டுமின்றி கன்சல்டண்சி நிறுவனமாகவும் செயல்படுகிறது.

பொறியியல் பட்டதாரிகள் 110
பொறியியல் அல்லாத பட்டதாரிகள் 36
டிப்ளமோ தகுதி 36
ஐடிஐ தகுதி 49
மொத்தம் 252
பொறியியல் பட்டதாரிகளுக்கான பிரிவில் சிவில், கட்டக்கலை, எலெக்ட்ரிக்கல், சிக்னல், மெக்கானிக்கல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகள் நிரப்பப்படுகிறது.

பொறியியல் அல்லாத பட்டதாரிகள் பிரிவில் நிதி மற்றும் ஹெச்.ஆர் இடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ தகுதியின் கீழ் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், வேதியியல் நிரப்பப்படுகிறது. ஐடிஐ தகுதியின் கீழ் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் இதர தொழில்கள் உள்ளன. 17.11.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 18 வயதை நிறைந்து இருக்க வேண்டும்.

பொறியியல் பிரிவிற்கு மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். பொறியியல் அல்லாத இடங்களுக்கு BA/BBA/B.Com/B.Sc./BCA ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். மேலும், மேல் குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களாக இருக்க வேண்டும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையாக பயிற்சி காலம் வரை அளிக்கப்படும். பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கும் மாதம் ரூ.14.,000 வழங்கப்படும். டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12,000 மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

ரைட்ஸ் நிறுவன தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்கள் அவர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவேளை விண்ணப்பதார்களின் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், வயதில் மூத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே, தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.

ஆர்வமுள்ளவர்கள் இதற்கான அறிவிப்பை https://www.rites.com/Career என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தொடர்ந்து, https://nats.education.gov.in/student_type.php மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளங்களின் வழியாக பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, https://apprentice.rites.com:444/ApprenticeForm என்ற இணைப்பில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. டிசம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். தேர்வு பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்

இப்பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து இளைஞர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசு நிறுவன தொழிற்பயிற்சி வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். எனவே தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget